வியாழன், 15 செப்டம்பர், 2016

தீக்குளித்த விக்னேஷ் மரணம் .. நாம் தமிழர் பேரணியில் ..

உடலில் பெட்ரோல் ஊற்றி பற்ற வைத்துக் கொண்ட  விக்னேஷ் , சக தொண்டர்களும், காவல்துறையினரும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கோபாலசமுத்திரம் மேலவீதியை சேர்ந்தவர் பாண்டியன் (விவசாயி).  அவரது மனைவி கண்ணகி, வீட்டில் தையல் மிஷின் வைத்து தைத்து வருகிறார். இவரது மகன் விக்னேஷ் (26) இவர் மன்னார்குடி அர்பன் வங்கி பள்ளியில் 10ம் வகுப்பு முடித்துவிட்டு, லார்டு செவன் ஹில்ஸ் பள்ளியில் 12ம் வகுப்பு படித்தார். பின்னர் நாமக்கல் சுரபி பாலிடெக்னில் டி.எம்.இ. படித்துவிட்டு சென்னையில் டிவிஎஸ் கம்பெனியில் 1வருடம் பணிபுரிந்து, பின்னர் டி.ஐ. சைக்கிள் கம்பெனியில் மெக்கானிக்காக வேலை செய்துவருகிறார்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியில் இணைந்து 1.5 வருட காலமாக தன்னை இணைத்து கொண்டு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார். ;இன்று(15.9.2016) நாம் கட்சி தமிழர் கட்சி சார்பில் சென்னையில் நடந்த, கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவது குறித்து நடந்த கண்டன பேரணியில் கலந்துக்கொண்டு தனக்கு தானே தீவைத்துக்கொண்டதில் உடல் முழுவதும் தீக்காயம் அடைந்து அருகில் உள்ளவர்கள் அவர்மீது பற்றி எரிந்த தீயை அணைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இச்செய்தியினை அறிந்த மன்னார்குடியில் உள்ள அவரது பெற்றோர்கள் அலறி துடித்தனர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களை சமாதானம் செய்தனர்
நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மன்னார்குடி நிர்வாகிகள் அவரது வீட்டிற்கு சென்று அவர்களது பெற்றோருக்கு ஆறுதல் கூறினர். அதனை தொடர்ந்து அவர்களது பெற்றோர் மற்றும் அவரது அக்கா ஜனனி (திருமணமானவர்)ஆகியோர் கார் மூலம் சென்னைக்கு விக்னேஷை பார்ப்பதற்காக சென்றனர்.p;மன்னார்குடியைச் சேர்ந்த இளைஞர் விக்னேஷ் தமிழர்களுக்காக சென்னையில் தீக்குளித்த சம்பவம் மன்னார்குடி பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.p; - இரா.பகத்சிங்<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக