வியாழன், 1 செப்டம்பர், 2016

ஆம் ஆத்மியில் இருந்த ஒரே தலித் அமைச்சர் பதவி நீக்கம் ! தவறான குற்றச்சாட்டில்.....?

டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி மந்திரிசபையில் சமூக நலத்துறை மந்திரியாக இருப்பவர் சந்தீப்குமார். இவர் சுல்தான்பூர் மஜ்ரா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். மந்திரி சந்தீப்குமார் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போன்ற ஒரு சிடி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஆம்ஆத்மி கட்சியின் உயர்மட்ட தலைவர்களுடன் முதல்-மந்திரி கெஜ்ரிவால் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது கட்சியின் கொள்கைக்கும் பெயருக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் மந்திரி சந்தீப்குமார் பெயரில் வெளியான சி.டி. பற்றி ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனைக்கு பின்னர் மந்திரி சபையில் இருந்து சந்தீப்குமாரை நீக்கம் செய்ய கெஜ்ரிவால் முடிவு செய்தார். இதனை அவர் தனது டுவிட்டர் வலைத்தள பக்கத்தில் நேற்று அறிவித்தார். இந்நிலையில் மந்திரி பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட சந்தீப் குமார், நான் தலித் என்பதால் என்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.  ஒரு பெண்ணின் சம்மதத்துடன் அவரோடு இருப்பது அல்லது உறவு கொள்வதென்பது சட்டப்படி குற்றம் அல்லவே? மேலும் இதுபற்றி தீர விசாரிக்காமல் தலித் என்பதால் வேகவேகமாக முடிவெடுத்து...  


இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சந்தீப்குமார் கூறுகையில், 'நான் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போன்ற சி.டி.யை தொலைக்காட்சியில் பார்த்து மிகவும் வேதனையடைந்தேன். அந்த சி.டி.யில் சிறிதும் நம்பகத்தன்மை இல்லை.

ஆம் ஆத்மி கட்சியில் நான் மட்டும் தான் தலித் சமூகத்தை சேர்ந்தவன். மற்ற அரசியல்வாதிகளைப் போல எனக்கு எந்தவித அரசியல் பின்னணியும் இல்லை. அதனால் தான் எனக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்படக்கூடாது என்பதாலேயே மந்திரி பதவியிலிருந்து விலகினேன். ஆனால் கட்சிக்காக உழைப்பதை நிறுத்த மாட்டேன்' என்றார்.  மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக