செவ்வாய், 6 செப்டம்பர், 2016

ராகுல் காந்தி 9 பேரை நேர்காணல்.. TN காங்கிரஸ் தலைவர் பதவி... விஜயதரணி தகவல்...

சென்னை: விரைவில் தமிழக காங்கிரசுக்கு தலைவர் நியமிக்கப்படுவார் என்றும், 9 பேரை அழைத்து ராகுல் காந்தி நேர்காணல் நடத்தினார் என்றும் விஜயதரணி எம்எல்ஏ கூறியுள்ளார். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 145வது பிறந்தநாள் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று கொண்டாடப்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது உருவ படத்திற்கு முன்னாள் தலைவர் குமரி அனந்தன், விஜயதரணி எம்எல்ஏ, பொது செயலாளர் சிரஞ்சீவி, மத்திய சென்னை மாவட்ட தலைவர் என்.ரங்கபாஷ்யம், முன்னாள் எம்எல்ஏ பலராமன் ஆகியோர் மலர் தூவி மரியாதை ெசலுத்தினர். நிகழ்ச்சியில் எம்.ஆர்.ஏழுமலை, சூளை ராஜேந்திரன் உள்பட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். (பீட்டர்அல்போன்ஸ்?) 


அதன் பின்னர் விஜயதரணி எம்எல்ஏ அளித்த பேட்டி: இந்திய கடல் பகுதிகளில் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. பாஜ அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க தவறி விட்டது. காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த நீர் வழி ேபாக்குவரத்து திட்டத்தை பாஜ அரசு கிடப்பில் போட்டுள்ளது. இணையம் துறைமுகம் திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. இத்திட்டத்தால் மீனவ கிராமங்கள் அழிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்படும் மக்களுக்கு மறுசீரமைப்பு எந்த வழியில் செயல்படுத்தப்படும் என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும். இணையத்தை மையமாக கொண்டு துறைமுகம் அமைக்கப்படுகிறதா அல்லது குளச்சலை மையமாக வைத்து துறைமுகம் அமைக்கப்படுகிறதா? என்பதை மத்திய அரசு மக்களிடம் தெளிவாக விளக்க வேண்டும். துறைமுகம் அமைக்கும் திட்டத்தால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், மக்களுடன் இணைந்து நாங்கள் போராடுவோம்.

தமிழக காங்கிரஸ் தலைவர் விரைவில் நியமிக்கப்படுகிறார். காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி திருநாவுக்கரசர், சுதர்சன நாச்சியப்பன்,  மாணிக்தாகூர்,  கோபிநாத், ஜெயக்குமார், செல்லக்குமார், வசந்தகுமார், பீட்டர் அல்போன்ஸ், நான் உள்பட 9 பேரை அழைத்து நேர்காணல் நடத்தி முடித்துள்ளார். இவர்களில் ஒருவரைதான் தலைவராக நியமிக்க அதிக வாய்ப்புள்ளது. யாரை தலைவராக நியமித்தாலும் அவர்களுக்கு முழு ஆதரவு அளிப்போம். உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் தலைவர் நியமிக்கப்படுவார். சிஏஜி அறிக்கையில் தமிழக அரசின் செயல்பாடு வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக