வியாழன், 1 செப்டம்பர், 2016

ஜியோ 4 ஜி... போட்டி நிறுவனங்களுக்கு 11,983 கோடி இழப்பு.. முகேஷ் அம்பானி 45 நிமிட பேச்சு

மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்ற ரிலையன்ஸ் ஜியோ அறிமுக விழாவில் முகேஷ் அம்பானி கலந்து கொண்டு ஜியோ 4 ஜி சேவையை தொடங்கி வைத்தார். அப்போது அவர், ரிலையன்ஸ் திட்டம் மற்றும் சலுகைகள், சந்தை வாய்ப்புகள் குறித்து சுமார் 45 நிமிடங்கள் பேசினார். பிற மொபைல் சேவை நிறுவனங்கள் தற்போது ஒரு ஜி.பி. இணையதள சேவைக்கு 250 ரூபாய் வசூலித்து வருகின்றன. ஆனால் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஒரு ஜி.பி.க்கு 50 ரூபாய் மட்டுமே வசூலிக்கும். இது மற்ற நிறுவனங்களை காட்டிலும, 5 முதல் 10 மடங்கு குறைவு. அதிக அளவில் பயன்படுத்தும்போது ஒரு ஜி.பி. 25 ரூபாய் என கணக்கிடப்படும். ஒரு சில திட்டங்களில் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல் எப்போதும் இலவசம். அதற்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்றார்.


இதையடுத்து மும்பை பங்குசந்தையில் பாரதி ஏர்டெல் பங்குகள் 6.37 சதவிகிதம் சரிந்து 310 ரூபாயாக குறைந்தது. ஐடியா செல்லுலார் நிறுவன பங்குகள் 10.48 சதவிகிதம் குறைந்து 83 ரூபாய் 70 காசுகளாக இருந்தது. இதனால் பாரதி ஏர்டெல் நிறுவனத்திற்கு 12 ஆயிரம் கோடி ரூபாயும், ஐடியா செல்லுலார் நிறுவனத்துக்கு 2 ஆயிரத்து 800 கோடி ரூபாயும் இழப்பு ஏற்பட்டது. வர்த்தக முடிவில் போட்டி நிறுவனங்களுக்கு 11,983 கோடி இழப்பு ஏற்பட்டதாக கணக்கிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக