திங்கள், 15 ஆகஸ்ட், 2016

இளையராஜா to எஸ்பி பாலா : இனிமேல் எந்த இசை மேடைகளிலும் எனது பாடல்களை நீங்கள் பாடக்கூடாது

sp_ilaiசென்னையில் பாடகர் எஸ். பி ..பாலசுப்பிரமணியத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா ”கட்டளை” எமது சென்னைச் செய்தியாளர் பிரகாஸ் மற்றும் அருண்
மிக விரைவில் அமெரிக்காவில் இசையமைப்பாளர் இளையராஜா மிகப் பெரிய இசைநிகழ்ச்சியை நடத்தவுள்ளார்.
இது குறித்து அண்மையில் சென்னையில் பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியத்தை தனது வீட்டுக்கு அழைத்த அவர் மேற்படி அமெரிக்க நிகழ்ச்சிக்கு தன்னோடு வரும்படி அழைத்தார். அப்போது பதிலளித்த பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் தனது 50வது இசையுலகப் பயணம் தொடர்பான வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் தான் கவனம் செலுத்த வேண்டியுள்ளதால் அமெரிக்காவிற்கு தன்னால் வரமுடியாது என்று கூறினார்.

இதனால் கோபமடைந்த இசையமைப்பாளர் இளையராஜா ”அப்படி உன்னால் எனது அமெரிக்க நிகழ்ச்சிக்கு வரமுடியாவிட்டால், உனது நிகழ்ச்சிதான் உனக்கு முக்கியமானதாகத் தெரிந்தால் ”இனிமேல் எந்த இசை மேடைகளிலும் எனது பாடல்களை நீ பாடக்கூடாது” என்று கட்டளையிட்டார். நன்றி லங்காசீ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக