வியாழன், 25 ஆகஸ்ட், 2016

JHU யில் அன்புமணி உருவபொம்மை எரிப்பு ...குடிசை கொளுத்தியே வெளியேறு”: டெல்லி மாணவர்கள் போராட்டம்!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்கச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாசுக்கு எதிராக மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் .டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமூக நீதி என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் பங்கேற்கச் சென்ற அன்புமணிக்கு எதிராக பாப்சா, எஸ்எஃபை, ஏஐஎஸ்ஏ உள்ளிட்ட மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அன்பு‌மணியின் உருவபொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்திய மாணவர்கள், தலித் மக்களுக்கு எதிராக அன்புமணி செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினர்.


“குடிசை கொளுத்தியே வெளியேறு” “சாதிவெறிக்கு சிவப்பு கம்பளமா?” போன்ற கோஷங்களை முன்வைத்து போராட்டம் செய்தனர். ஜேஎன்யூவில் பயிலும் தமிழக மாணவர்கள் பலர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
anbumanianbumani 2முன்னதாக ஜேஎன்யூ மாணவர் சங்கத்தைச் சேர்ந்த உமர் காலித், அன்புமணிக்கு எதிரான போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
படங்கள்: Vijay Amirtharaj   thetimestamil.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக