வியாழன், 11 ஆகஸ்ட், 2016

டெல்லி .CCTV .விபத்தில் சிக்கியவர் ஒரு மணிநேரமாக உயிருக்கு போராடி இறந்தார் யாரும் உதவவில்லை


A man hit by a tempo bled on a Delhi road for 90 minutes on Wednesday morning. Hundreds of people drove past the dying man, but not one person came forward to help. The only one who walked up to the injured man ended up helping himself: He walked away with the dying man's mobile phone
இந்தியத் தலைநகர் டெல்லியில் போக்குவரத்து மிகுந்த முக்கிய சாலை ஒன்றில், சிறிய வேன் மோதி விபத்துக்குள்ளான நபர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உயிருக்குப் போராடி சாலையிலேயே இறந்துவிட்டார். அந்த வழியாகச் சென்றவர்கள் யாரும் அவரைக் காப்பாற்ற முன்வராததே அதற்குக் காரணம்.
இணையத்தில் பரவி வரும் இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகளில், அந்த நபரை மோதித் தள்ளிய பிறகு வேன் ஓட்டுநர் வெளியே வந்து பாதிப்புக்குள்ளான நபரை பார்க்கிறார். பின்னர் தனது வாகனத்தை எடுத்துக் கொண்டு செல்கிறார்.பின்னர், அந்த வழியாக வந்த ஒருவர் இறுதியாக, அடிப்பட்டவரை அணுகுகிறார்.

அந்த நபரைக் காப்பாற்றுவதற்கு பதிலாக, அவரிடமிருந்த கைப்பேசியை திருடிச் செல்கிறார்.
இரவுப்பணி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்ற போது சாலையில் விபத்துக்குள்ளான அந்த நபருக்கு உதவ யாருமின்றி, உயிரை விட நேர்ந்திருக்கிறது.
யாருமே உதவத் தயாராக இல்லாத, மனிதநேயமற்ற மனநிலை, இந்தியாவில் பெரும் விவாவதத்தைக் கிளப்பி உள்ளது.bbc.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக