வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

இந்தியாவின் முதல் பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடுதான்..



‘ஹைடெக் முதல்வர்‘ என்று ஒரு காலத்தில் புகழப்பட்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு, தற்போது ‘இந்தியாவின் நம்பர் ஒன் கோடீஸ்வர முதல்வர்’ என்ற அந்தஸ்த்து(?) கிடைத்துள்ளது. ஆம்.... இந்தியாவில் கோடீஸ்வர முதல்வர்கள் பட்டியலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முதல் இடத்தைப் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.134.8 கோடியாம். இந்தியாவைச் சேர்ந்த கோடீஸ்வர முதல்வர்கள் குறித்த பட்டியல் குறித்த ஆய்வை அசோசியேஷன் ஆப் டெமாகிரட்டிக் ரீஃபார்ம் நிறுவனம் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பும் நடத்தியது. தற்போது, கோடீஸ்வரர் பட்டியலில் உள்ள முதல்வர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முதல் இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.134.8 கோடியாம். 2012ல் இவரது சொத்து மதிப்பு வெறும் ரூ.35.59 கோடியாகக் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. நான்கு வருடத்துக்குள் நாயுடுவின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, அருணாசலப் பிரதேச முதல்வர் பெமா கண்டு 2வது இடம் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.129.57 கோடியாக உள்ளது. ஆந்திர அமைச்சரவையில் 20 பேர் அமைச்சர்களாக உள்ளனர். இவர்களில் 18 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர். இவர்களில் முதல் இடத்தில் அமைச்சர் நாராயணா உள்ளார். அவர்கள் தங்களது சொத்து மதிப்பை தேர்தல் கமிஷனில் காட்டியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக