புதன், 3 ஆகஸ்ட், 2016

துபாய்: எமிரேட்ஸ் விமானம் தீப்பிடித்தது. பயணிகள் பாதிப்பில்லை.. திருவனந்தபுரத்தில் இருந்து..

துபாய், உலகில் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான துபாய் விமான நிலையத்தில் எமிரெட்ஸ் விமானம் விபத்தில் சிக்கியதை தொடர்ந்து விமான சேவை நிறுத்தப்பட்டு உள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து சென்ற எமிரெட்ஸ் விமானம் துபாயில் தரையிறங்கிய போது மோதி விபத்தில் சிக்கியது. எமிரெட்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 777 ரக விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் உடனடியாக பத்திரமாக வெளியேற்றப்பட்டன. அப்போது தரையில் மோதிய விமானத்தில் தீ விபத்து நேரிட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் விமானத்தில் பிடித்து இருந்த தீயை அணைக்கும் பணியை தொடங்கினர். இதற்கிடையே விமானத்தின் நடுப்பகுதி மற்றும் வால்பகுதி எரிந்துவிட்டது. உலகில் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான துபாய் விமான நிலையத்தில் இந்த விபத்து நேரிட்டதை தொடர்ந்து விமான சேவை நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. 


துபாய் விமானநிலையம் வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், “துபாய் சர்வதேச விமான நிலையத்தில் EK521 விமான விபத்து சம்பவம் நேரிட்டதை தொடர்ந்து, இதுதொடர்பாக அடுத்தக்கட்ட அறிவிப்பு வெளியாகும் வரையில் விமான நிலையத்தில் அனைத்து செயல்பாடுகளும் (விமானம் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல்) இடைநிறுத்தம் செய்யப்படுகிறது.” என்று கூறப்பட்டு உள்ளது. துபாய் சர்வதேச விமான நிலையத்தில் சேவையானது பாதிக்கப்பட்டு உள்ளது, அடுத்தக்கட்ட அறிவிப்பு வெளியாகும் வரையில் விமானங்கள் புறப்படுவதில் காலதாமதம் நேரிட்டு உள்ளது. 

விமான நிலையத்தின் செயல்பாடு தொடர்பாக 5 மணிக்கு அறிவிப்பு வெளியிடுவோம். இதுதொடர்பாக தகவல்களை தெரிந்துக் கொள்ள பயணிகள் அவர்களுடைய ஏர்லைன்ஸை தொடர்புக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர் என்று துபாய் விமான நிலையம் செய்தி வெளியிட்டு உள்ளது. dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக