செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

கலைச்செல்வியின் உயிர் சுவாதியின் உயிரைவிட ......?

அமராவதிபுதூர் பிரேம்நாத்'s photo.
கபாலி எதிர்ப்பாளர்களின் கண்களுக்கு இது போன்ற செய்திகள் எல்லாம் தெரிய வாய்ப்பில்லை...!
தஞ்சாவூர் அருகில் உள்ள பூண்டி வாண்டையார் வசிக்கும் கிராமமான சாலியமங்கலத்தைச் சேர்ந்த பட்டியல் இன (தோட்டி) சமூகத்தைச் சேர்ந்த கலைச்செல்வி என்கிற 20 வயதுப் பெண்ணை ராஜா, குமார் என்கிற இரண்டு சாதி இந்துக்கள் பாலியல் வன்புணர்ச்சி செய்து கொலை செய்து உள்ளனர். அந்தப் பெண்ணின் வாயில் கிழிந்து போன ஜட்டியை வைத்து அடைத்துக் கை கால்களைக் கட்டிப் போட்டுக் கடுமையாக அடித்துச் சித்ரவதை செய்து கொலை செய்து உள்ளனர். சுவாதி படுகொலைக்கு எதிராகப் பெரிய அளவில் கொந்தளித்த நாம் கலைச்செல்வி படுகொலைக்கு அமைதியாக இருக்கிறோம். செய்தி கூட வெளியே வரவில்லை. 

வெட்கமாக இருக்கிறது. நீதியின் குரலில் அடிக்கும் பாகுபாட்டின் வாடை 10 நாட்கள் அழுகிப்போன பிண வாடையை விட நாறுகிறது. சுடுகாட்டில் புதைக்கப்பட்ட கலைச்செல்வி, " நீங்களும் பிணங்கள்தான் நான் புதைக்கப்பட்டு விட்டேன் ஆனால் நீங்கள் இன்னும் புதைக்கப்படவில்லை. இது ஒன்றுதான் வேறுபாடு" என்று சொல்வது போல உள்ளது. சுவாதி படுகொலைக்காகத் தமிழ்நாடே பொங்குச்சு....! கலைச்செல்விக்காகப் பொங்குமா....? ஒரு போதும் பொங்காது...! ஏனென்றால் இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் பட்டியல் இனத்தவரின் உயிர் மற்றவர்களுக்கு மயிர்....!!! வெட்கித் தலைகுனி தமிழா...! முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக