திங்கள், 29 ஆகஸ்ட், 2016

அமைச்சர் சண்முகநாதன் பதவி பறிப்பு .. சசிகலா புஷ்பா ஆதரவாளர் என்ற சந்தேகம்...

தமிழக அமைச்சரவையில் ;பால்வளத் துறை அமைச்சராக இருந்த சண்முகநாதன் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப் படுகிறார். அவர் கவனித்து வந்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர  பாலாஜிக்கு அளிக்கப்பட்டுள்ளது.  அதேபோல் ராஜேந்திர பாலாஜி வசம் இருந்த ஊரக தொழில்துறை, அமைச்சர் பெஞ்சமினுக்கு வழங்கபப்டுகிறது..அமைச்சர் பெஞ்சமின் வசம் இருந்த பள்ளிக்கல்வித் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அதிமுகவின் ஆவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே. பாண்டிய ராஜனுக்கு  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பரிந்துரையின் பேரில் இந்த மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.புதிய அமைச்சரின் பதவியேற்பு விழா நாளை மாலை 04.35 மணிக்கு ஆளுநர் மாளிகையில்நடைபெறும் என்றும் அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக