வியாழன், 25 ஆகஸ்ட், 2016

நாய்களை கொல்லும் திட்டம்; கேரள அரசின் முடிவுக்கு விலங்கு நலவாதிகள் எதிர்ப்பு

திருவனந்தபுரம் : ஆபத்தான தெரு நாய்களை கொல்லும் கேரள அரசின் முடிவுக்கு, விலங்குகள் நல அமைப்பு, கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.;சுப்ரீம் கோர்ட்டில்... கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது; இங்கு, தெரு நாய் தொல்லை மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது; கடந்தாண்டில் மட்டும், ஒரு லட்சம் பேர், நாய் கடிக்கு ஆளாகியுள்ளனர். இதுதொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகளும் நடக்கின்றன. இந்நிலையில், திருவனந்தபுரத்தின் புறநகர் பகுதியான, புல்லுவிலா கடற்கரை அருகே வசித்து வந்த, 65 வயதான பெண், தெரு நாய்கள் கடித்ததில் உயிரிழந்தார்; இந்த சம்பவம், கேரளாவில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து 'ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய தெரு நாய்களை பிடித்து, அவற்றை கொல்ல நடவடிக்கை எடுக்கப்படும்' என கேரள அரசு அறிவித்தது; இதற்கு, விலங்குகள் நல அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


இதுகுறித்து, அந்த அமைப்பின் கேரள மாநில பொறுப்பாளர் ரனீஷ் கூறியதாவது: தெரு நாய்களை பிடித்து, கொடூரமாக கொல்லும் நடைமுறைக்கு, சுப்ரீம் கோர்ட், ஏற்னவே தடை விதித்துள்ளது. தெரு நாய்களை கொல்லும் கேரள அரசின் முடிவை கடுமையாக எதிர்க்கிறோம். நாய்களுக்கு கருத்தடை மட்டுமே செய்ய வேண்டும்.

வழக்கு தொடர...
குப்பை கூளங்கள் அதிகரித்துள்ளதே, நாய்களின் எண்ணிக்கை உயர்வதற்கு காரணம். குப்பைகளை அகற்ற, உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதையும் மீறி, தெரு நாய்களை கொல்ல நடவடிக்கை எடுத்தால், வழக்கு தொடருவோம். இவ்வாறு அவர் கூறினார்    தினமலர்.கம

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக