செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

சசிகலா புஷ்பா வீடு தாக்குதல்!


நேற்று ராஜ்யசபாவில் அதிமுக தலைமை மீது அடுத்தடுத்து அதிர்ச்சி குற்றச்சாட்டுகளை வீசிய சசிகலா புஷ்பா எம்.பி-யின் வீடு தாக்கப்பட்டிருக்கிறது. அவர் நேற்று நாடாளுமன்றத்தில் பேசத் தொடங்கும்போதே தனது பாதுகாப்பு பற்றிதான் பேசினார். அவரது கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு, டெல்லியில் உள்ள அவரது இல்லத்துக்கும் அவருக்கும் பாதுகாப்பு வழங்கியது. ‘ராஜ்யசபாவுக்கு வெளியே தனக்கோ, கணவருக்கோ, மகனுக்கோ ஏதாவது நேர்ந்தால் அதற்கு அதிமுக-தான் பொறுப்பு’ எனவும் சசிகலா புஷ்பா தெரிவித்தார்.
இந்நிலையில், நெல்லை மாவட்டத்திலுள்ள சசிகலா புஷ்பாவின் கணவரான லிங்கேஷ்வரின் பூர்வீக வீடு தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. நெல்லை மாவட்டம் கரைச்சுத்து, உவரி கிராமத்தில் உள்ள சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஷ்வரனின் பூர்வீக இல்லத்தில் நடந்துள்ள தாக்குதலால் அங்கு பதற்றம் நிலவுகிறது. தொடர்ந்து சசிகலா புஷ்பா சென்னையில் வசிக்கும் வீட்டுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக