வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

சுவாதி கொலை திருப்பம்... ஆடியோ ஆதாரம் சிக்கியது


சுவாதியின் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட பெண், காவல்துறையினர் தன்னை கொலை முயற்சி செய்வதாக கூறி வெளிநாட்டுக்கு தப்பி ஓடியுள்ளதாக தமிழச்சி தனது முந்தைய பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
சுவாதியின் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட பெண், காவல்துறையினர் தன்னை கொலை முயற்சி செய்வதாக கூறி வெளிநாட்டுக்கு தப்பி ஓடியுள்ளதாக தமிழச்சி தனது முந்தைய பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார். மேலும், சுவாதி படுகொலை தொடர்பான வலுவான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது, வெளிநாட்டில் தப்பி ஓடியுள்ள பெண்ணுடன் நடந்த உரையாடலை ஆதாரமாக பதிவு செய்து வைத்துள்ள தமிழச்சி, அதில் சில நிமிட பதிவை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு மற்றும் ஆடியோ, சுவாதியின் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட பெண் காவல்துறையில் உள்ள இருவர் கொலை முயற்சி செய்வதாக கூறி வெளிநாட்டுக்கு தப்பி சென்ற பின் பல அதிர்ச்சிகர தகவல்களை தருகிறார்.

அவற்றில் சில இங்கு குரல் பதிவாக உள்ளது கேளுங்கள்: “…. என்னை எப்படியாவது கொன்னுடனும்னு காவல்துறையைச் சேர்ந்த அந்த இரண்டு பேரும் முயற்சி பண்ணாங்க. அதுவும் ‘ரம்ஜான் பண்டிகை’ அன்னைக்கு சாகடிக்கனும்னு திட்டம் போட்டாங்க. அவங்க அனுப்பிய கூலிப்படை கிட்ட இருந்து இரண்டு முறை தப்பிச்சிட்டேன்….”  முகநூல் பதிவு சற்று முன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக