புதன், 31 ஆகஸ்ட், 2016

பச்சமுத்து :பணத்தை கொடுக்குமாறு சொன்னேன் .. பசங்க கேக்கல .. இப்ப பாத்தீங்களா..?

மின்னம்பலம்.காம் :தன்னை கைது செய்வார்கள், சிறையில் அடைப்பார்கள், போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பார்கள்என்றெல்லாம் பச்சமுத்துவோ, அவரது குடும்பத்தினரோ கனவிலும் நினைக்கவில்லை. 5 நாட்கள் போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டபோது, நீதிமன்றம்ஒருநாள் மட்டுமே அனுமதி வழங்கியிருக்கிறது. இன்று காலை 6.20 மணிக்கே புழல் சிறையிலிருந்து அழைத்து வரப்பட்ட பச்சமுத்துவிடம் 7.30 மணிக்கே விசாரணைதொடங்கிவிட்டது. பச்சமுத்துவிடம் கேட்பதற்காக போலீஸ் சுமார் 150 கேள்விகளை தயார் செய்து வைத்திருந்ததாம். போலீஸ் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும்பொறுமையாகவே பதில் சொல்லியிருக்கிறார் பச்சமுத்து.
அதில் குறிப்பாக, மதனுக்கும் பச்சமுத்துக்கும் ஏற்பட்ட அறிமுகம், இருவருக்கும் எப்படி நெருக்கமானது, மதனிடம்இடையில் ஏற்பட்ட பிரிவு என எல்லாவற்றுக்கும் பச்சமுத்து பதில் சொல்லியிருக்கிறார். கடைசியாக, மதன் எப்போது பேசினார் என்ற கேள்வியும் அதில் இருந்திருக்கிறது.
‘மதனுக்கும் எனக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. மதனுடன் நான் பேசுவது என் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. அதனால், அவரது நட்பை துண்டித்துக் கொண்டேன்.மற்றபடி எனக்கும் மதனுக்கும் எந்த மன வருத்தமும் இல்லை. மதனை விசாரித்தாலும் நான் சொல்வது எந்த அளவுக்கு உண்மை என்பது உங்களுக்கு தெரியும்’ என்றுபச்சமுத்து சொன்னதாக சொல்கிறார்கள். மதிய உணவை ஹோட்டலில் இருந்து வாங்கி வந்து கொடுத்திருக்கிறார்கள். சாப்பிடும்போது, ‘என்ன பணம் இருந்து என்னபிரியோஜனம்…யாருக்கும் நிர்வாகம் செய்ய தெரியலையே.. என்னை எங்கே கொண்டு வந்து உட்கார வெச்சுட்டாங்க பாருங்க!’ என்று, பச்சமுத்து வருத்தப்பட்டுப்பேசியதாகவும் சொல்கிறார்கள். மகன்கள் மீது பச்சமுத்து வருத்தமும் கோபமுமாக இருப்பதாகச் சொல்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில். பச்சமுத்து ஜாமீனில் வெளியேவந்தபிறகு எஸ்.ஆர்.எம். குடும்பத்துக்குள் அடுத்தடுத்த பிரச்னைகள் வெடிக்கும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்" என்ற ஸ்டேட்டஸ்க்கு வாட்ஸ் அப் லைக் போட்டு ஷேர்செய்தது.

அத்துடன் கமெண்ட்டில், ‘நானும் கேள்விப்பட்டேன்… பணத்தை திருப்பிக் கொடுத்துடலாம்னு இப்போ வந்து கோர்ட்ல மனு போடுறாங்களே... இதைத்தானே மதன் காணாமல்போனதுல இருந்து நான் சொல்லிட்டு இருந்தேன். அப்பவே கேட்டிருந்தால், நான் அசிங்கப்படாமல் இருந்திருப்பேன். இப்போ எவ்வளவு அசிங்கப்படுத்த முடியுமோஅசிங்கப்படுத்திட்டு, பணத்தைக் கொடுக்கலாம்னு வராங்க…’ என்றும்கூட பச்சமுத்து சொன்னாராம்" என்று போட்டுவிட்டு ஆஃப் லைனில் போனது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக