புதன், 17 ஆகஸ்ட், 2016

மும்பை : ஆறுபேரை கொன்று தோட்டத்தில் புதைத்த ஹோமியோ டாக்டர்


டாக்டர் நடத்திய மரண விளையாட்டு: ஆறு பேரை கொலை செய்தது அம்பலம் மும்பை: மஹாராஷ்டிராவைச் சேர்ந்த டாக்டர், ஐந்து பெண்கள் உட்பட ஆறு பேரை கொன்றது, போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியை மங்கல் ஜெதே, 49, சமீபத்தில் காணாமல் போனார். அவரை கண்டுபிடிக்க வலியுறுத்தி, உள்ளூர் ஆசிரியர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டது.


அதைத் தொடர்ந்து நடந்த போலீஸ்
விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த டாக்டர் சந்தோஷ் போல், 41, என்பவருடன், ஜெதேவுக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. போலீஸ் தேடுவதை அறிந்த சந்தோஷ் போல், தன்னிடம் நர்ஸ் வேலை பார்த்த ஜோதி மந்த்ரேயுடன் தலைமறை வானார். தேடுதல்வேட்டைக்குப் பின், இருவரும் கண்டுபிடிக்கப்பட்டனர்.

உள்ளூர் மக்களால், 'டாக்டர் டெத்' என, தற்போது அழைக்கப்படும், சந்தோஷ் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக் கப்பட்டதாவது:ஆசிரியை ஜெதேவுடன் டாக்டருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நர்ஸ் ஜோதி யுடன் உள்ள பழக்கத்தை ஜெதே கண்டித்துள்ளார்; இதை, கிராம மக்களிடம் தெரிவிக்கப் போவதாகவும் மிரட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்தடாக்டர் சந்தோஷ், ஜெதேவை, தன் பண்ணை இல்லத்துக்கு கடத்திச் சென்று, ஊசி போட்டு கொலை செய்துள்ளார்; பின் பண்ணையில் உடலை புதைத்துள்ளார்.ஜெதேவைத் தவிர மேலும் நான்கு பெண்களையும் விஷ ஊசி போட்டு கொலை செய்து, பண்ணை இல்லத்தில் புதைத்துள்ளதாக டாக்டர் சந்தோஷ் தெரிவித்துள் ளார். இதைத் தவிர, மேலும் ஒருவரை கொலை செய்து, அருகிலுள்ள அணையில் வீசியுள்ளார்.இவ்வாறு விசாரணையில் அவர் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பணத்தாசை மற்றும் பெண்ணாசையில், டாக்டர் சந்தோஷ், இந்த கொடூரத்தை செய்துள்ளார். பண்ணை வீட்டில் புதைக்கப்பட்ட பெண்களின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக