வியாழன், 11 ஆகஸ்ட், 2016

சசிகலா புஷ்பா : நடந்த கொடுமைகளை தெருத்தெருவாக கூறி பிரசாரம் செய்வேன்... அதிமுக ஒரு அடிமைகள் கூடாரம்

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தன்னை எந்த அளவுக்கு கஷ்டப்படுத்தினாலும் தனது கொள்கையிலிருந்து பின்வாங்க போவதில்லை என கூறியுள்ளார். ஒரு பெண்ணை கஷ்டப்படுத்துவதற்காகவா தமிழக மக்கள் ஒரு பெண்ணை முதல்வராக தேர்ந்தெடுத்தார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகம் முழுவதும் தெருத்தெருவாக சென்று தனக்கு நடந்த கொடுமைகளை கூறி அதிமுகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்வேன். நான் வீரமான சமூகத்தை சேர்ந்தவள் என்னை கேவலப்படுத்துவது என்னுடைய சமூகத்தை கேவலப்படுத்துவதற்கு சமம். என்னை போல பலர் அடிமைகளின் கூடாரமான அதிமுகவால் அநீதி இழைக்கப்பட்டு குமுறிக்கொண்டு இருக்கிறார்கள். எனக்கெதிராக அநீதிகள் தொடர்ந்தால் என்னுடைய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் வேறு மாதிரி இருக்கும் மேலும் தமிழகத்தையே புரட்டிப்போடும் சக்தி எனக்குள்ளது என்றார். சசிகலா புஷ்பாவின் இந்த பேட்டி அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெப்துனியா.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக