திங்கள், 29 ஆகஸ்ட், 2016

மக்கள் நகராட்சி பேரூராட்சி தலைவர்களை தேர்தெடுக்கும் உரிமை பறிக்கப்பட்டது?

நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவரை நேரடியாகத் தேர்வு செய்யும் முறை ரத்து செய்யப்படுகிறது. இத்தலைவர்களை மறைமுகமாக மன்ற உறுப்பினர்களே தேர்வு செய்ய வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவை பேரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திங்கட்கிழமை தாக்கல் செய்தார். இந்த சட்டத் திருத்த மசோதாவை அறிமுகம் செய்வதற்காக அமைச்சர் வேலுமணி கொண்டு வந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத் திருத்த மசோதாவில் கூறப்பட்டிருப்பதாவது:-
தற்போது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் மன்றங்களுக்கான தேர்தல், கட்சிகள் அடிப்படையில் நடத்தப்படுகின்றன. தலைவர்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இனி bogusvotescm  இன் கால் கழுவும் பாத்திமாவோ பாண்டேயோகூட  மக்கள் செல்வாக்கு இல்லாமலே மேயராகலாம்
சில சூழ்நிலைகளில், தலைவர், மன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பையும், மன்ற உறுப்பினர்கள் தலைவரின் ஒத்துழைப்பையும் பெறுவதில்லை என்றும், அதனால் தலைவர், மன்ற உறுப்பினர் ஆகிய இருவரும் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதால், பொதுமக்களுக்கு நகரியப் பணிகளைச் செய்வதற்கான தீர்மானங்களை நிறைவேற்றுவதிலும் மன்றங்களின் நடவடிக்கைகளில் கருத்தொற்றுமை ஏற்படுவதற்கும் தடைகள் இருப்பதாக அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மாநகராட்சி மன்றங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை உணர்ந்து மன்ற உறுப்பினர்கள் தங்களில் இருந்து ஒருவரை மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கும் வகையில் 2016-ம் ஆண்டு தமிழ்நாடு மாநகராட்சிச் சட்டங்கள் (திருத்த) சட்டம் (தமிழ்நாடு சட்டம் 8/2016) இயற்றப்பட்டது. அதன்படியே மாநிலத்தில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் ஒரே சீரான தேர்தல் நடைமுறைகளைக் கொண்டு வரும் வகையில், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் தலைவர்களை மன்ற உறுப்பினர்களே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அரசு முடிவு செய்திருக்கிறது.
இந்த முடிவுக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், அரசு 1920-ம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தை (தமிழ்நாடு சட்டம் V/1920)) திருத்தம் செய்வதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று சட்டமசோதாவில் கூறப்பட்டுள்ளது.
இந்த சட்டத் திருத்தத்தின்படி, நகராட்சி அல்லது பேரூராட்சி மன்றத்துக்கான ஒவ்வொரு சாதாரண தேர்தலுக்குப் பிறகு கூடும் முதல் கூட்டத்தில், மன்ற உறுப்பினர் ஒருவரை தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த தேதியில் இருந்து 5 ஆண்டுகள் அவர் அப்பதவி வகிக்க வேண்டும். அந்தக் காலத்தில் அவரது கவுன்சிலர் பதவி ரத்தாகாது.
நகராட்சி, பேரூராட்சித் தலைவர் பதவிக் காலத்தில் காலியிடம் ஏற்பட்டால், அந்த மன்றத்தில் உள்ள வேறொரு உறுப்பினர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அவ்வாறு தேர்வு செய்யப்படுபவர், உடனடியாகப் பதவி ஏற்க வேண்டும். அன்றில் இருந்து மீதமுள்ள காலத்துக்கு மட்டுமே தலைவராக இருக்க முடியும். நகராட்சி அல்லது பேரூராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியில் இருக்கும் ஒருவர் தகுதியற்றவர் என நீக்கப்பட்டலோ, அவரது பதவிக்காலம் முடிந்தாலோ தலைவர் பதவியில் அவர் நீடிக்க முடியாது என்று சட்டத் திருத்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நீண்டகாலத்துக்குப் பிறகு 1996-ம் ஆண்டு திமுக ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. அப்போது சென்னையில் திமுகவைச் சேர்ந்த மு.க.ஸ்டாலின் (தற்போதைய எதிர்கட்சித் தலைவர்) மன்ற உறுப்பினர்களால் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர், 2001-ல் அதிமுக ஆட்சியில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டு, மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டனர். 2006-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தபோது, மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்களை மன்ற உறுப்பினர்களே தேர்வு செய்யும் வகையில் மீண்டும் சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டது.
2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சியைப் பிடித்தபோது, மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்களை நேரடியாகத் தேர்வு செய்யும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டது. இப்போது நகராட்சி, பேரூராட்சித் தலைவர்களை மன்ற உறுப்பினர்களே தேர்வு செய்யும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வருவதற்கான சட்டமசோதா பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பேரவைக் கூட்டத் தொடரின் கடைசி நாளில் இந்த சட்டதிருத்த மசோதா நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   ://tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக