திங்கள், 15 ஆகஸ்ட், 2016

யமுனா நதி நிரம்பி வழிகிறது... பதட்டத்தில் டெல்லி மக்கள் பாதுகாப்பு தேடி....


புதுடில்லி: ஹரியானாவில் இருந்து, யமுனை ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறந்துவிடப் பட்டு ள்ளதால், டில்லியில், வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. அங்கு, கடந்த சில தினங்களாக பலத்த மழை
பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல், பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக, யமுனை ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது; ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.கிழக்கு டில்லி யில், தாழ்வான பகுதிகளில், ஏற்கனவே வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அங்கிருந்த மக்கள் வெளியேற் றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக் கப்பட்டுள்ளனர். வெள்ள தடுப்பு பிரிவினரும், மீட்பு குழுவினரும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
''தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் அங்கிருந்து வெளியேறி, முகாம்களுக்கு செல்ல வேண்டும்,'' என, டில்லி மாநில நீர்வளத்துறை அமைச்சர் கபில் மிஸ்ரா எச்சரித்துள்ளார் . டில்லி மட்டுமின்றி, அதன் புறநகர் பகுதிகளிலும் வெள்ளம் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, 'டில்லியில் கனமழை தொடரும்' எனவானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள தால், மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.  தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக