ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

வாழத்தகுதியற்ற நாடா இந்தியா ? – புகைப்படங்கள்

rajabari-1vinavu.com  : மழை வெள்ளத்தில் தமிழகம் மூழ்கிய போது குறிப்பாக சென்னை – கடலூர் மக்கள் பட்ட அவதிகளையும், செம்பரபாக்கம் புகழ் அம்மாவின் அலட்சிய நிர்வாகத்தினையும் பார்த்தோம். இது இந்தியாவின் பல மாநிலங்களில் வருடம் தோறும் நடக்கின்ற துயரமாக மாறி வருகிறது. இந்தியத் தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டுநிறுவனங்களின் வேட்டைக் காடாக மாற்றப்படும் இந்தியாவில் அவர்களது நலனுக்காக மக்களின் வாழ்வாதாரங்கள் பலி கொடுக்கப்பட்டு வளர்ச்சி எனும் மாயையை முன்னிறுத்துகிறார்கள்.
விளைவு எல்லா நகரங்களிலும் எந்த வசதிகளும் இல்லாத சேரிகளில் கோடிக்கணக்கான மக்கள் அவதிப்படுகின்றனர். நடுத்தர வர்க்கமும் ஓரளவு பாதிக்கப்படுகிறது. கனிம வளங்கள், சுற்றுலா பகுதிகளிலும் இந்த அழிவு பெரும் பாதிப்புகளை தோற்றுவித்திருக்கிறது. மும்பை முதல் அஸ்ஸாம் வரை இந்தியா முழுவதும் மழை வெள்ளத்தில் தத்தளிக்கின்றனது. அரசு நிர்வாகமோ செயலிழந்து போயிருக்கிறது. இந்த புகைப்படங்களின் மூலம் நமது மக்கள் எத்தகைய அபாயங்களில் வாழ்கிறார்கள் என்பது தெரிகிறது.
அஸ்ஸாம் காம்ருப் மாவட்டத்தின் ராஜபரி கிராமத்தை சேர்ந்த வயதானவர், மூழ்கிய நிலையில் இருக்கும் மின் டிரான்ஸ்பாரின் அருகில் வெள்ளத்தைக் கடந்து செல்ல படகை பயன்படுத்துகிறார்.
அஸ்ஸாம் காம்ரூப் மாவட்டத்தில் உள்ள மேற்கு மாயோங் கிராமப் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமவாசிகள் வெள்ள நிவாரணப்பொருளை பெறுவதற்கு படகின் மூலம் செல்கின்றனர்.
அஸ்ஸாம் காம்ரூப் மாவட்டத்தில் உள்ள மேற்கு மாயோங் கிராமப் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமவாசிகள் வெள்ள நிவாரணப்பொருளை பெறுவதற்கு படகின் மூலம் செல்கின்றனர்.
அஸ்ஸாம் காம்ரூப் மாவட்டத்தில் உள்ள பாணிகாட்டியில் வெள்ளத்தால் வீடுகளை இழந்த மக்கள் தங்களுக்கான உணவை இரயில் தண்டவாளத்தின் அருகே சமைக்கின்றனர்.
அஸ்ஸாம் காம்ரூப் மாவட்டத்தில் உள்ள பாணிகாட்டியில் வெள்ளத்தால் வீடுகளை இழந்த மக்கள் தங்களுக்கான உணவை இரயில் தண்டவாளத்தின் அருகே சமைக்கின்றனர்.
அஸ்ஸாம் மோரிகோன் மாவட்டத்தை சேர்ந்த சில்டூபி யில் வீடுகள் வெள்ளத்தால் மூழ்கியதால் மூதாட்டியை பாதுக்காப்பான இடத்திற்கு தூக்கிக் கொண்டு செல்கினறனர்
அஸ்ஸாம் மோரிகோன் மாவட்டத்தை சேர்ந்த சில்டூபியில் வீடுகள் வெள்ளத்தால் மூழ்கியதால் மூதாட்டியை பாதுக்காப்பான இடத்திற்கு தூக்கிக் கொண்டு செல்கினறனர்
அஸ்ஸாம் சில்டூபி கிராமத்தில் ஏற்ப்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் காலநடைகளுடன் பாதுக்காப்பான இடத்திற்கு படகில் செல்கின்றனர். அஸ்ஸாமில் தொடர்ந்து கொட்டித்தீர்த்த பருவ மழை வெள்ளத்தினால் 12 லட்சம் மக்கள் தங்களின் வெள்ளம் புகுந்த வீட்டில் வசிக்க முடியாமல் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பீகார் மாநிலத்தின் கதிகர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் வெள்ளத்தால் மூழ்கிய சாலையை மக்கள் கடந்து செல்லும் காட்சி.
பீகார் மாநிலத்தின் கதிகர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் வெள்ளத்தால் மூழ்கிய சாலையை மக்கள் கடந்து செல்லும் காட்சி.
பீகார் கதிகர் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் உடைமைகளோடு பாதுக்காப்பான இடத்திற்கு படகில் செல்கின்றனர்.
பீகார் கதிகர் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் உடைமைகளோடு பாதுக்காப்பான இடத்திற்கு படகில் செல்கின்றனர்.
அஸ்ஸாம் மோரிகோன் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிஸ்கெட் வழங்கும் போது அதைப் பெற முயற்சிக்கும் குழந்தைகள். ஒரு வாரம் பெய்த கன மழையினால் 12-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மோரிகோன் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த ஒரு குடும்பத்தினர் வாழை-கட்டுமரத்தை பயன்படுத்தி மீன்பிடி வலைகளைத் தாண்டி பாதுக்காப்பான இடத்திற்கு செல்கின்றனர்
மோரிகோன் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த ஒரு குடும்பத்தினர் வாழை-கட்டுமரத்தை பயன்படுத்தி மீன்பிடி வலைகளைத் தாண்டி பாதுக்காப்பான இடத்திற்கு செல்கின்றனர்
ஃபாரிதாபாத்தில் அதிக கனமழையால் மூழ்கிய சாலையில் ஆட்டோவை தள்ளிச் செல்லும் இருவர்.
ஹரியானா ஃபாரிதாபாத்தில் தண்ணீர் மூழ்கிய சாலையில் ஆட்டோவை தள்ளிச் செல்லும் இருவர்.
அதீத மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் வால்சத் நகரத்திலுள்ள மூழ்கிய வீட்டின் கூரையின் மேல் தஞ்சமடைந்துள்ள மக்கள்.
குஜராத் வால்சத் நகரத்தில் மூழ்கிய வீட்டின் கூரையின் மேல் தஞ்சமடைந்த மக்கள்.
அஸ்ஸாம் மாநிலம் இந்திய-பூட்டான் எல்லையருகே உள்ள சிராங் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இராணுவத்தினர் மீட்கின்றனர்
அஸ்ஸாம் மாநிலம் இந்திய-பூட்டான் எல்லையருகே உள்ள சிராங் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இராணுவத்தினர் மீட்கின்றனர்
அஸ்ஸாம் மாநிலம் கசிரங்கா தேசிய பூங்காவில் வெள்ள நீரில் பாதி மூழ்கிய நிலையில் காணப்படும் ஒற்றைக் கொம்பு காண்டா மிருகம்.
அஸ்ஸாம் மாநிலம் கசிரங்கா தேசிய பூங்காவில் வெள்ள நீரில் பாதி மூழ்கிய நிலையில் காணப்படும் ஒற்றைக் கொம்பு காண்டா மிருகம்.
சாவித்திரி நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மகாராஷ்டிரா, மும்பைக்கு தெற்கே மாகாத்தில் உள்ள இரண்டு பாலங்களில் ஒன்று சரிந்தது.
சாவித்திரி நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மகாராஷ்டிரா, மும்பைக்கு தெற்கே மாகாத்தில் உள்ள இரண்டு பாலங்களில் ஒன்று சரிந்தது.
அலகாபாத் - கங்கை வெள்ளத்தில் ஒருவர் தனது குழந்தையையும், ஒரு மரக்கட்டிலையும் எடுத்து செல்கிறார்.
அலகாபாத் – கங்கை வெள்ளத்தில் ஒருவர் தனது குழந்தையையும், ஒரு மரக்கட்டிலையும் எடுத்து செல்கிறார்.
அலகாபாத்- கங்கை நதி வெள்ளத்தில் மூழ்கிய கோயில்
உத்திரப்பிரதேசம் அலகாபாத்- கங்கை நதி வெள்ளத்தில் மூழ்கிய கோயில்
கவுகாத்தி - மழை வெள்ளத்தில் நடந்து செல்லும் பானிப்பூரி விற்பவர்
அஸ்ஸாம் கவுகாத்தி – மழை வெள்ளத்தில் நடந்து செல்லும் பானிப்பூரி விற்பவர்
கங்கை மற்றும் யமுனை நதிகளில் நீர்வரத்து அதிகரித்ததால் அலகாபாத்தில் வெள்ளத்தில் மூழ்கிய குடிசைகள்
கங்கை மற்றும் யமுனை நதிகளில் நீர்வரத்து அதிகரித்ததால் அலகாபாத்தில் வெள்ளத்தில் மூழ்கிய குடிசைகள்
 நன்றி : அவுட்லுக் –  OutLook ஆங்கில வார இதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக