செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் பாட்டு பாட ஆர்வம்.. பாடலை அம்மா ரசிக்கிறாங்களாம்.. அதான் !

சட்டசபையில் கருணாஸ் பேசும் போது, சினிமா பாடல்களை, ராகத்துடன் பாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். நேற்று, 'கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும்' என்ற பாடலை மாற்றி, 'கேட்காமலே கொடுக்கப்படும்; தட்டாமலே திறக்கப்படும் முதல்வர் ஆட்சியில்' என, ராகத்துடன் பாடினார்; அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் தாளம் போட்டனர்.
அவரது பாடலை, முதல்வர் ரசித்து கேட்பதால், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களும் பாடத் துவங்கி உள்ளனர். அமைச்சர் துரைக்கண்ணு அவ்வப்போது பாடுகிறார். நேற்று கேள்வி நேரத்தின் போது, எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி, முதல்வரை பாராட்டி, சில வரிகளைப் பாடினார்.
ரூ.3,229 கோடியில் குடிநீர் மேம்பாட்டு பணிகள் : சட்டசபையில் முதல்வர் ஜெ., அறிவிப்பு சென்னை,: ''ஏழு மாநகராட்சி மற்றும் நான்கு நகராட்சிகளில், 3,229 கோடி ரூபாய் செலவில், குடிநீர் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். சட்டசபையில், 110 விதியில், அவர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்:

* மின் கட்டண செலவை குறைக்க, தெரு விளக்குகள் அனைத்தையும், எல்.இ.டி., விளக்குகளாக மாற்ற, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
முதற்கட்டமாக, 10 மாநகராட்சிகள்; திருப்பூர் மண்டலத்தில், 19 நகராட்சிகள்; தஞ்சாவூர் மண்டலம், 18 நகராட்சிகளில், பாதரச குழல் விளக்குகள், எல்.இ.டி., விளக்குகளாக மாற்றப்படுகின்றன.
இந்த ஆண்டு, திண்டுக்கல் மாநகராட்சியிலும், மீதமுள்ள அனைத்து நகராட்சிகளிலும், தெரு விளக்குகள், எல்.இ.டி., விளக்குகளாக மாற்றப்படும். இத்திட்டம், 320 கோடி ரூபாய் செலவில், தனியார் மற்றும் அரசின் பங்களிப்பு மூலம் செயல்படுத்தப்படும்.
* புத்துணர்வு மற்றும் நகர்ப்புற மாற்றங்களுக்கான அட்டல் திட்டம், மத்திய, மாநில அரசு பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகிறது. இதில், சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, திருப்பூர், தஞ்சாவூர், வேலுார் ஆகிய மாநகராட்சிகளிலும்; நாகர்கோவில், ராஜபாளையம், ஆம்பூர், ஓசூர் நகராட்சிகளிலும், 3,229 கோடி ரூபாய் செலவில், குடிநீர் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
* வேளாங்கண்ணி பேரூராட்சியில், பாதாள சாக்கடை திட்டப் பணிகள், 23 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.

* திருச்சி மாநகராட்சி மற்றும், 36 நகராட்சிகளில், திடக்கழிவு மேலாண்மை திட்டம், 116 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.
* அரசு மருத்துவமனைகளில், உள்நோயாளியாக சிகிச்சைப் பெறுவோரின் உறவினர்கள் மற்றும் உதவியாளர்கள், குறைந்த செலவில் தங்க, 'குறுகிய கால தங்கும் விடுதிகள்' அமைக்க, அரசு முடிவு செய்துள்ளது.
முதற்கட்டமாக, சென்னை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, கடலுார், தஞ்சாவூர், கிருஷ்ணகிரி, சேலம், விருதுநகர்,
திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களில்,23 குறுகிய கால தங்கும் விடுதிகள், 12 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்; மிகக் குறைந்த வாடகை நிர்ணயிக்கப்படும்.
lமேட்டுப்பாளையம் நகராட்சியில், ஜெர்மன் மேம்பாட்டு வங்கி நிதி உதவியுடன், 92 கோடி ரூபாய் செலவில், பாதாள
சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும். இதன்மூலம் பவானி ஆற்றில், கழிவுநீர் கலப்பது தடுக்கப்படும்.
* திறந்தவெளியில் மலம் கழித்தலை அறவே நீக்க, மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில், 1.25 லட்சம் தனிக் குடியிருப்பு கழிப்பறைகள், 150 கோடி ரூபாயில்
கட்டப்படும். மேலும், 2,184 இருக்கைகள் கொண்ட, சமுதாய கழிப்பறைகள், 21 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும்.
* அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும், திறந்தவெளியில் மலம் கழித்தலை தடுக்க, மக்களிடம் விழிப்புணர்வு
ஏற்படுத்தும் பணிகள், 57 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.
* ஈரோடு மாநகராட்சியில், இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீரை, மறுசுழற்சி மற்றும் மறு பயன்பாட்டிற்காக, மீண்டும் சுத்திகரிக்க, மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையம், 62 கோடி ரூபாய் மதிப்பில்,
அரசு மற்றும் தனியார் பங்களிப்பு முறையில் அமைக்கப்படும்.
* பெரம்பலுார் நகராட்சியில், 13 கோடி ரூபாய் செலவில், மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையம், அரசுமற்றும் தனியார் பங்களிப்பு முறையில் நிறுவப்படும்.
* துாத்துக்குடி மாநகராட்சி பகுதியான, சங்கரப்பேரி, பண்டாரம்பட்டி, மீளவிட்டான், முத்தையாபுரம் பகுதிகளில், வெள்ளநீர் வெளியேற, 73 கோடி ரூபாயில், மழைநீர் வடிகால் கட்டப்படும். * கடலுார் நகரில், 15வார்டுகளில், 84 கி.மீ., நீளத்திற்கு, 39 கோடி ரூபாயில், மழைநீர் வடிகால் அமைக்கப்படும்.
* நீடித்த நிலையான குடிநீர் பாதுகாப்பு இயக்கம், 20 கோடி ரூபாயில், மாநிலத்தின் அனைத்து நகர்ப்புற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
* பேரூராட்சிகளில், திறந்தவெளியில் மலம் கழித்தலை, அறவே நீக்கம் செய்ய, இந்த ஆண்டு, 90,150 தனிநபர் கழிப்பறைகள், 108 கோடி ரூபாயில் கட்டப்படும். மேலும், 2,620 இருக்கைகள் கொண்ட, சமுதாய கழிப்பறைகள், 17 கோடி ரூபாயில் கட்டப்படும்.இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.

பாட்டு பாட எம்.எல்.ஏ.,க்கள் ஆர்வம்
சட்டசபையில், முதல்வர் ஜெயலலிதா, 110 விதியில், முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டதும், அவரை பாராட்டி, எம்.எல்.ஏ.,க்கள் தமிமுன் அன்சாரி,
தனியரசு, கருணாஸ் ஆகியோர் பேசுவர்.கருணாஸ் பேசும் போது, சினிமா பாடல்களை, ராகத்துடன் பாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். நேற்று, 'கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும்' என்ற பாடலை மாற்றி, 'கேட்காமலே கொடுக்கப்படும்; தட்டாமலே திறக்கப்படும் முதல்வர் ஆட்சியில்' என, ராகத்துடன் பாடினார்; அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் தாளம் போட்டனர்.
அவரது பாடலை, முதல்வர் ரசித்து கேட்பதால், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களும் பாடத் துவங்கி உள்ளனர். அமைச்சர் துரைக்கண்ணு அவ்வப்போது பாடுகிறார். நேற்று கேள்வி நேரத்தின் போது, எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி, முதல்வரை பாராட்டி, சில வரிகளைப் பாடினார்.  தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக