செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

காலணி லேஸை கட்ட பாதுகாப்பு அதிகாரியை பணித்த அமைச்சர் (வீடியோ) !

ஒடிசாவில் சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் யோகேந்திர பெகேரா மேடையில் இருந்து இறங்க தயாரானபோது அவரது காலணியில் உள்ள லேஸ் அவிழ்ந்திருப்பதை கண்டார். அப்போது தனது காலை கவனித்தார். அப்போது உடனிருந்த பாதுகாப்பு அதிகாரி காலணி லேஸை கட்டி விட்டார்.  இந்த காட்சி அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் எரிச்சல் அடைந்தார். ''நான் என்ன அவரை (பாதுகாப்பு அதிகாரியை) கட்டாயப்படுத்தினேனா? மிரட்டினேனா? அடித்து துன்புறுத்தினேனா? இதனை ஏன் பெரிதுபடுத்துகிறீர்கள்.'' என்றார்."

;ஒடிசாவில் பீஜூ ஜனதா தளம் கட்சியின் நவின் பட்நாயக் முதல் அமைச்சராக உள்ளார். அமைச்சரின் செயலை முதல் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்ற ஊடகத்துறையினர், தமது செயலுக்கு அமைச்சர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். nakkeeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக