செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

ஜாக்கி வாசுதேவ் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை? பணம் பணம் பணம்....

பலத்த சர்ச்சையில் சிக்கியிருக்கிறது, ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம். கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாற்று எரிசக்தி நிபுணரான பேராசிரியர் காமராஜ் தம்பதியர், ஜக்கி மீது இந்தமுறை முறையிட்டி ருக்கிறார்கள்.
;கோவை மாவட்ட ஆட்சியரிடமும் மாவட்ட எஸ்.பி.யிடமும் புகார் அளித்தவர்களிடம் பேசியபோது, அந்தக் கல்விமானும் அவரின் மனைவியும் நம்மிடம் குமுறியழாத குறையாக நடந்ததைக் கொட்டித் தீர்த்தனர். ""சார்... எங்க ரெண்டு பொண்ணு களயும் சின்ன வயசுல இருந்தே சாமி, கடவுள்னு சொல்லிச் சொல்லியே வளத்தோம். அதுதான் இப்ப தப்பா போயி ருச்சு. பெரிய பொண்ணு எம்.டெக்., சின்னப் பொண்ணு பி.டெக். முடிச்சி, நல்ல வேலையில இருந்தாங்க.  இந்த டைம்லதான் ஈஷா யோகா மையம்ல நடக்குற சிவராத்திரி விழாவுக்கு ரெண்டுபேரும் போனாங்க. அப்போ இருந்து எங்க ரெண்டு பொண்ணுகளுக்கும் ஜக்கிதான் கடவுள். ஒரு கட்டத்தில எங்க பொண்ணுக ஈசா மையத்திலயே இருக்க ஆரம்பிச்சுட்டாங்க. நாங்க கேட்டதுக்கு...’"சத்குரு (ஜக்கி) எங்களை ரொம்ப நேசிக்கிறாரு... இங்கயே இருந்து யோகா வகுப்புகளை  எடுக்கச் சொல்றாரு. இங்கேயே இருக்கறோம்...'னு சொன்னாங்க. யோகா டீச்சிங்தானேன்னு நாங்களும் சரின்னு வந்துட்டோம்.

பொண்ணுகளுக்கு கல்யாணம் பண்ணணும்ங்கிற யோசனை வந்தப்போ... அவங்கள கூட்டிட்டு வந்துரலாம்னு முடிவுபண்ணோம். அப்போ... என் பொண்ணுக போன் பண்ணினாங்க. "அப்பா...  இங்க என்னென்னமோ நடக்குதுப்பா. வெளி நாட்டிலயிருந்து வர்றவங்க கிட்ட எங்களை தப்பா நடந்துக்கச் சொல்றாங்க. கர்ப்பப்பைய எடுக்கணும்னு சொல்றாங்க. எங்களுக்கு பயமா இருக்கு. வந்து எங்களை கூட்டிட் டுப் போங்கப்பா'னு அழுதாங்க. பதறியடிச்சுட்டுப் போனோம். அங்க... ஐயோ... எங்க ரெண்டு பொண்ணுகளையும் மொட்டை அடிச்சு, சாமியார் ட்ரெஸ் போட்டு உட்கார வச்சிருந்தாங்க. நாங்க பதறி... "அவங்கள எங்ககூட அனுப்பிருங்க'னு கேட்டோம். அதுக்கு, "உங்க பொண்ணுக விருப்பப்பட்டா கூட்டிட்டுப் போங்க'னு சொன்னாங்க.>போனில் கதறுன எங்க பொண்ணுககிட்ட நேர்ல பேசினா... "இங்க நிம்மதியா இருக்கறோம். எங்களை இப்படியே விட்ருங்க'னு சொன்னாங்க. கெஞ்சிக்கேட்டும் ஏதோ பொம்மை மாதிரி பேசாம அப்படியே நடந்து போனாங்க. கையப் புடிச்சு இழுத்தும் வரவேயில்லை. முந்தின நாள் நைட்டுதான் அவங்களே கூப்பிட்டு, "எப்படியாவது கூட்டிட்டுப் போங்க'னு சொன்னாங்க. அதுக்குள்ள எப்படி மாத்திப் பேசுறாங்கனு அதிர்ச்சியாப் போச்சு...''’என்றவர்கள் தொடர்ந்தனர்.""மகள்களின் நிலைமை இப்படி ஆயிருச்சேனு கவலையா இருந்தாலும், தொடர்ந்து எங்க பொண்ணுகளைப் பார்க்கப் போனோம். ஆனா அவங்களப் பார்க்ககூட ஆசிரமத்துல அனுமதிக் கலை. ஜக்கி வாசுதேவ் வந்த காரை மறிச்சு, "எங்க பொண்ணுகளை எங்களுக்கு கொடுத்துருங்க'னுகூட கேட்டோம். அதுக்கு அவரு, "உங்க பொண்ணுக கடவுளுக்கு சேவை செய்யறாங்க'னு சொன்னாரு. "அப்படீன்னா உங்க பொண்ணையும் எங்க பொண்ணுக மாதிரி மொட்டை அடிச்சு இப்படி சேவை செய்ய வச்சிருக்கலாமே? எதுக்கு தடபுடலா கல்யாணம் பண்ணிக் கொடுத்தீங்க'னு கோபமா கேட்டதுக்கு... அவரும் கோபமா கிளம்பிட்டாரு. எங்களுக்கு எங்க பொண்ணுக வேணும். அதுனாலதான் கலெக்டரையும், எஸ்.பி. மேடம் ரம்யாபாரதியையும் பார்த்து "எங்க பொண்ணுகளை மெஸ்மரிசம் பண்ணி ஆசிரமத்தில் வச்சு இருக்காங்க. மீட்டு கொடுங்க'னு  புகார் கொடுத்திருக்கோம்''’என அழுகிறார்கள், பேராசிரியர் காமராஜும் அவரின் மனைவியும்.
>புகார் மீதான "லைட்'டான விசாரணை தொடர்பாக, எஸ்.பி. அலுவலகத்துக்கு வந்த மூத்த மகள் கீதாவும் அவரின் தங்கை லதாவும் ""நாங்க விரும்பிதான் ஆசிரமத்தில் இருக்கிறோம். பெற்றோருடன் செல்ல விருப்பமில்லை''’என்று தன்னிலை விளக்கமளித்துவிட்டுப் போனார்கள்.>இது குறித்து ஈஷா யோகா மையத்தினரைத் தொடர்புகொண்டோம்...’""அதுதான் அந்த பொண்ணுகளே சொல்லிட்டாங்களே. அப்புறம் இதுல சொல்றதுக்கு என்ன இருக்கு.’இத்தனை வருஷம் கழித்து பெற்றோர் திடீர்னு புகார் தருவதில் ஏதோ உள்நோக்கம் இருக்கணும்'' என்று பதில் வந்தது. இதற்கிடையில் ஈஷாவில் இருக்கும் ஒருவரே நம்மைத் தொடர்புகொண்டு, ""சார்... இந்த ரெண்டு பொண்ணுக மட்டும் இல்ல சார், நிறைய பொண்ணுங்கள மயக்கி வச்சிருக்காங்க. தியானக்கூடத்தில் ஊதுபத்திகள் எரியும். அதில இருந்து வர்ற புகை மயக்கம் உண்டாக்கும். ஏன்னா, அது கஞ்சா சேத்து தயாரிக்கப் பட்ட ஊதுபத்திகள். கஞ்சா மயக்கம்தான்... வேண்டிய உறவுகளை மறுக்க வைக்கிறது. மறுக்க வேண்டிய இடத்தை விரும்பச் செய்கிறது''’என்றார் அவர்.போலீஸ் தரப்பில் கேட்டதற்கு, ""பெண்கள் ரெண்டு பேரும் மேஜர்; அவர்கள் விருப்பத்தில் தலையிடமுடியாது. ஆனால் ஆசிரமத்தில் உள்ள பெண்களுக்கு ஊக்க மருந்து கொடுக்கிறார்கள் என்றால், புகாரின் பேரில் விசாரணை நடத்தப்படும்''’என்றார் எஸ்.பி. ரம்யாபாரதி. <மர்மங்கள் விலகட்டும்!<அருள்குமார்   நக்கீரன்,இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக