வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

ஆயிரத்துக்கு மேற்பட்ட செல்போன் அழைப்புக்கள் ஏன்? தமிழச்சி தொடர்ந்து வெளியிடும் அதிர்ச்சி தகவல்கள்


சுவாதி வழக்கில், ராம்குமாரை அப்பாவி என்றும், தொடக்கத்திலிருந்தே போலீசார் உண்மைகளை மறைத்து வருகின்றனர் என்றும், சமூக வலைதளத்தில் பிரபலமான தமிழச்சி என்பவர் குற்றம் சாட்டிவருகிறார்
சுவாதி வழக்கில் யார் குற்றவாளி என்ற உண்மை தெரிந்த பெண்ணை, தமிழகத்தை சேர்ந்த ஒரு காவல் அதிகாரியே கொலை செய்ய முயன்றார் என்று கூறி, அந்த பெண் பேசிய ஆடியோவையும் சமீபத்தில் முகநூலில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.இந்நிலையில், நேற்று தன்னுடைய முகநூலில் அவர் மீண்டும் ஒரு பரபரப்பு குற்றசாட்டுகளை தமிழக போலீசார் மீது கூறி மீண்டும் அந்த பெண் பேசும் ஒரு ஆடியோ வெளியிட்டுள்ளார். மேலும், அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
சுவாதியின் குடும்பத்தினரே தன்னை வெளிநாடுக்கு தப்பிச் செல்லும்படி கூறினர்" என்கிறார் வெளிநாட்டுக்கு தப்பியோடிய பெண். குறிப்பாக சுவாதியின் அப்பா இதில் தீவிரமாக இருந்துள்ளார். ஏன்? எதற்காக? இதன் உள்நோக்கம் என்ன? என்பதை சுவாதியின் அப்பாவே விளக்க வேண்டும்"

மேலும் தமிழக காவல்துறையினர் 'எக்ஸ்' பெண் கூறிய உண்மையான தகவல்களை குறித்து ஏன் விசாரணை நடத்த முற்படவில்லை? இன்ஸ்பெண்டர் கருணாகரன் சுவாதியின் வழக்கை திசை மாற்றுவதில் ஏன் தீவிரமாக அதுவும் சட்டத்திற்கு புறம்பான முறையில் இயங்க முற்பட்டார்?

இப்படி இன்னும் சில மர்மங்களை சுட்டிக்காட்டுகிறது இந்த காணொளி!
ஒவ்வொரு முறையும் பெண்ணின் ஆதாரத்தை வெளியிடும் போதும் மிகுந்த பதற்றத்திற்கும் மனஉளைச்சலுக்கும் உள்ளாகிறார். தமிழ்நாட்டிற்குள் இருக்கும் தன் குடும்பத்தினருக்கு சுவாதியின் குடும்பத்தினரும் காவல்துறையினரும் நெருக்கடி ஏற்படுத்தி விடுவார்களோ என்று பெரும் அச்சத்துடன் இதையும் குறிப்பிட்டு எழுதும்படி கூறுகிறார். எனவே தமிழக அரசு காவல்துறையினரின் விசாரணை போக்கில் தலையிட்டு என்ன நடக்கிறது? என்று விசாரணை நடத்த முன்வரவேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். வெப்துனியா.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக