வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

ராம்குமாருக்கு சுவாதியையே தெரியாது ! சுவாதி கொலை ஆய்வில் புதிய தகவல்கள் எவிடன்ஸ்


தொடக்கத்திலிருந்தே அவர் ராம்குமாருக்கும், இந்த கொலைக்கும் தொடர்பில்லை என்று கூறி பல ஆடியோ ஆதாரங்களை வெளியிட்டு வருகிறார். இந்த வழக்கில் தொடர்புடைய ஒரு பெண்ணை போலீசாரே கொல்ல முயன்றனர் என்று கூறி, அந்த பெண் பேசும் ஆடியோக்களை வெளியிட்டார். அதேபோல், இந்த கொலையில் தொடர்புடையாக கூறி கருப்பு முருகானந்தம் என்பவரை பற்றிய பல தகவல்களை அவர் நேற்று வெளியிட்டார்.சுவாதி கொலை செய்யப்பட்டு, ராம்குமார் கைது செய்யப்பட்டவுடன், ராம்குமார் பேஸ்புக் மூலம் சுவாதிக்கு அறிமுகமானவர் என்றும், அவர்கள் இருவரும் அவ்வப்போது பேஸ்புக்கில் சேட் செய்வார்கள் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டது . ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டன. அதேபோல், சுவாதியை பார்த்து காதல் கொண்ட ராம்குமார், அவரின் பின்னாலேயே சுற்றி அவருக்கு தொல்லை கொடுத்ததாகவும், தன் காதலை தெரிவித்த போது தன்னை தேவாங்கு என்று திட்டியதால் அவரை ராம்குமார் கொலை செய்ததாகவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டது. தற்போது ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், போலீசாரும் ஊடகங்களும் சொல்வது போல், ராம்குமாரும் சுவாதியும் பேஸ்புக் நண்பர்கள் இல்லை. இன்னும் சொல்லப்போனால், ராம்குமாருக்கு சுவாதியை யாரென்று தெரியாது என்று ராம்குமாரின் பேஸ்புக் கணக்கை ஆராய்ந்து ஒரு ஆடியோ ஆதாரத்தை தமிழச்சி வெளியிட்டுள்ளார். வெப்துனியா.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக