ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

வெள்ளிப்பதக்கம் வென்ற சிந்துவுக்கு விஜயகாந்துதான் ஆரம்பகால ஸ்பான்சர் ..

நடந்து வரும் ரியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து இறுதிப்போட்டியில் கலந்து கொண்டு, வெள்ளிப்பதக்கம் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். ஆனால் அவர் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் பேட்மிட்டன் போட்டியில், தமிழ்நாடு சார்பாக விளையாடியுள்ளார் என்று பல பேருக்கு தெரியாது..இந்தியாவில் பேட்மிட்டன் போட்டியை பிரபல படுத்துவதற்காக ஐ.பில்.எல் போட்டி நடத்தப்பட்டது. அப்போது, தமிழ்நாடு சார்பாக, தான் நடத்தி வந்த சென்னை ஸ்மாசர்ஸ் அணியில், சிந்துவை விளையாட எடுத்தது தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் தான்.

அந்த போட்டி நடைபெற்ற போது, விஜயகாந்த் நேரில் சென்று தொடங்கி வைத்தார். அதேபோல், இந்த ஒலிம்பிக்கில் சிந்து பங்கு கொண்ட அனைத்து போட்டிகளையும் விஜயகாந்த் ஆர்வமாக பார்த்து ரசித்தார்.>மேலும், அவர் வெள்ளிப்பதக்கம் வென்றதற்கு தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்தும் தெரிவித்தார்.<விஜயகாந்தை கிண்டல் செய்து மீம்ஸ் போட்டு கலாய்ப்பவர்கள் இதுபற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  வெப்துனியா.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக