ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

அமெரிக்க தேர்தலில் இரண்டு தமிழ் பெண்களும் ஒரு கேரளா பெண்ணும் வெற்றி பெறுவார்கள்?

வாஷிங்டன் - அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கிறது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு சபைகளுக்கும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியினர் 5 பேர் எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அவர்களில் 3 பேர் இந்திய வம்சாவளி பெண்கள். ஜனநாயக கட்சி சார்பில், வாஷிங்டனின் சியாட்டில் பகுதியில் பிரமிளா ஜெயபால் என்பவர் நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுகிறார். இவர் சென்னையில் பிறந்து அமெரிக்காவில் குடியேறியவர் ஆவார். இதேபோல ஜனநாயக கட்சியின் சார்பில், தற்போது கலிபோர்னியா மாகாண அட்டர்னி ஜெனரலாக உள்ள கமலா ஹாரிஸ் என்பவர் அமெரிக்க நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுகிறார். இவரது தாயார் சியாமளா கோபாலன் சென்னையில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர் ஆவார். தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர். தேர்தலில் கமலா வெற்றி பெற்றால் மேலவைக்குத் தேர்ந் தெடுக்கப்படும் முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமை கிடைக்கும்.


இந்தத் தேர்தலில் சமீபத்தில் நடந்த கருத்து கணிப்பின்படி பிரமிளாவும் கமலாவும் வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் புளோரிடாவில் இருந்து குடியரசு கட்சி சார்பில் லத்திகா மேரி தாமஸ் என்பவர் நாடாளுமன்ற உறுப்பினர் தேர் தலில் போட்டியிடுகிறார். இவர் கேரளாவின் கோட்டயம் மாவட்டம், பாளை பகுதியை பூர்விகமாகக் கொண்டவர் ஆவார். ஜனநாயகக் கட்சி சார்பில் 2 முறை எம்.பி.யாகத் தேர்ந் தெடுக்கப்பட்ட அமி பேரா மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார். இந்தத் தேர்தலில் 19 பெண்கள் போட்டியிடுகின்றனர்.  thinaboomi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக