புதன், 24 ஆகஸ்ட், 2016

பெண் ஊழியர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம்.. வீடியோ எடுத்து எம்.டி மிரட்டல்!

பெங்களூர்: தனது அலுவலகத்தில் பணியாற்றும் 3 பெண்களை பலாத்காரம் செய்து அதை வீடியோவும் எடுத்து வைத்து மிரட்டிய பெங்களூரை சேர்ந்த தனியார் நிறுவன தலைவர் மீது போலீசில் பரபரப்பு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரில் வேலியே பயிரை மேய்ந்த கதை போல நடந்துள்ள இந்த சம்பவம் பணிக்கு செல்லும் பெண்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Private office MD raped and videographed embloyees in Bangalore பெங்களூரின் மத்திய பகுதியிலுள்ளது எம்.ஜி.ரோடு. இங்குள்ள பிரபல, ரகஜா கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது My Family Health Options என்ற நிறுவனம். இது மருத்துவம், ஆரோக்கியம் தொடர்பான தனியார் கன்சல்டன்சி நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் (Md) பதவியில் இருப்பவர் பானு பிரகாஷ். பெங்களூரின் மைக்கோ லேஅவுட் பகுதியில் இவரது வீடு உள்ளது. இந்நிலையில், பானு பிரகாஷுக்கு எதிராக அவரது நிறுவனத்தில் பணியாற்றும் மூன்று பெண்கள் இணைந்து போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளனர். ஆபீஸ் சுற்றுப் பயணம் எனக் கூறி வெவ்வேறு தருணங்களில் தங்களை தனித்தனியாக பானு பிரகாஷ் அழைத்து சென்றதாகவும், அப்போது ஹோட்டல் அறையில் தாங்கள் தங்க வைக்கப்பட்டதாகவும், அந்த நேரங்களில் மயக்க மருந்தை கொடுத்து தங்களை பானு பிரகாஷ் பலாத்காரம் செய்துவிட்டதாகவும் புகாரில் பெண்கள் கூறியுள்ளனர். மேலும், இவ்வாறு பலாத்காரம் செய்ததை வீடியோவாக எடுத்து வைத்து தங்களை மிரட்டி தொடர்ந்து ஆசைக்கு அடிபணிய மிரட்டுவதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளனர். டெலி-காலர் போன்ற பணியிடங்களுக்கு பெண்களை பணிக்கு எடுத்துவிட்டு அவர்களுக்கு பயிற்சி அவசியம் என்று ஒரு விதிமுறையை புகுத்தி, பயிற்சிக்கு வர வைத்து அவர்களையும் பானுபிரகாஷ் பலாத்காரம் செய்துள்ளார் என்று புகாரில் இப்பெண்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த விவகாரத்தை விசாரிக்கும்படி, தென்கிழக்கு பெங்களூர், மண்டல துணை கமிஷனருக்கு போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே பானுபிரகாஷ் தலைமறைவாகியுள்ளார். அவரை விரைவில் பிடித்துவிடுவோம் என்று, துணை கமிஷனர் போர லிங்கையா தெரிவித்துள்ளார். இதனிடையே புகாருக்கு உள்ளாகியுள்ள நிறுவனம் இப்போதும் செயல்பட்டுக்கொண்டுள்ளது. முக்கிய பதவிகளில் உள்ளவர்கள் ஆபீஸ் வராமல் இருப்பதாகவும், சில ஊழியர்களும் திடீரென விடுப்பு எடுத்துள்ளதாகவும், அங்கு நேரில் சென்று நிருபர்கள் விசாரித்தபோது தெரியவந்தது.

Read more at://tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக