திங்கள், 1 ஆகஸ்ட், 2016

வைரமுத்து - கபாலி ! அவனா சொன்னான் இருக்காது?...... உள்ளத்தில் உள்ளது உதட்டிலே வந்ததா? உதட்டிலே வந்தது உள்ளதே...


கவிஞர் வைரமுத்து அவர்கள் ‘கபாலி தோல்விப் படம்’ என்ற கருத்தைக் கூறியதால் நிகழ்ந்த பிரச்னைகளை தமிழகமறியும். வைரமுத்துவின் கருத்துக்கு முழு ரியாக்‌ஷன்
கிடைப்பதற்குள், ‘ரஜினியிடம் பேசிவிட்டேன். அவர் புரிந்துகொண்டார்’ என்று வைரமுத்து கொடுத்த ஸ்டேட்மெண்டில் ரசிகர்கள் அமைதியடைந்து விட்டனர். ஆனால், தயாரிப்பாளர் தாணு அந்த பிரச்னையை மீண்டும் லைட்டாக கிளறிவிட்டிருக்கிறார் தாணு. வழக்கம்போல், ‘வைரமுத்து கருத்து சொன்னதை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?’ என்று மீடியா கேட்க, ‘அகத்தில் இருந்தது, புறத்தில் தெரிந்தது. அவருடைய மனது என்ன நினைத்ததோ, அதுதான் வாய் வழியாக வந்துள்ளதாக நான் கருதுகிறேன். அவர் விமர்சிக்கலாம். ஆனால், அவரை விமர்சிக்க நாங்கள் தயாராக இல்லை’ என்று கூறியிருக்கிறார் தாணு. வைரமுத்து மீதான தாணுவின் அதிருப்தியின் ரியாக்‌ஷனாக, கபாலி படத்தில் சம்பளம் வாங்கி நடித்துவிட்டார் ரஜினி. படம் தோற்றால் பாதிக்கப்படப் போவது தாணு. ஆனால், விளக்கம் மட்டும் ஏன் ரஜினி தரப்பிடம் தரப்பட்டது என்ற கேள்விக்கு இங்கு வாய்ப்பு உருவாகிறதல்லவா என்று விவாதித்துக் கொண்டிருக்கிறது திரையுலகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக