திங்கள், 1 ஆகஸ்ட், 2016

தகுதியே இல்லாத துணைவேந்தர் வீணை காயத்திரி..


முதல்வருக்கு வேண்டியவராச்சே.. நடவடிக்கைகள் வேகமா இருக்குமே?'' ""மியூசிக் யுனிவர்சிட்டி தரப்பிலே விசாரிச்சேங்க தலைவரே.. .. தி.மு.க ஆட்சிக்காலத்திலிருந்து வேலையிலே இருக்கிறவங்ககிட்ட, காயத்ரி கோபத்தைக் காட்டுவாராம். தன்னோட ஆட்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பாராம். காயத்ரியோட பி.ஏ. குமாரும், மிருதங்க பயிற்சி சம்பந்தப்பட்ட மணிகண்டனும் மற்றவங்க விஷயத்திலே தலையிட்டிருக்காங்க. அதனால யுனிவர்சிட்டிக்குள்ளே புகைச்சலா இருந்திருக்குது. ஒப்பந்த அடிப்படையில் இருக்கிற பணியாளர்கள் சில பேரை காயத்ரி நீக்கியிருக்காரு. மோசடியான ஆட்களைத்தான் நீக்கினேன்னு காயத்ரி சொன்னாலும், பாதிக்கப்பட்டவங்களோ இது பழிவாங்கும் நடவடிக்கைன்னு அவங்க தரப்பு வேதனையை சொல்றாங்க. 

 இந்த நிலையிலேதான் காயத்ரியோட அலுவலக அறையிலே தாக்குதல் நடந்திருக்குது.'' ""கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டிருக்குதாமே?'' ""காயத்ரியோட மேசையிலே இருந்த ஒரு அட்டையிலே கொலை மிரட்டல் குறிப்பு எழுதப்பட்டிருக்குது. ஜெ.வுக்கும் சேர்த்தே இந்த மிரட்டல் இருந்ததா காயத்ரிக்கு ஆதரவானவங்க சொல்றாங்க. இந்தளவுக்கு விவகாரம் ஆகியிருக்குதுன்னா, மியூசிக் யுனிவர்சிட்டியிலே ஏதோ சுருதிபேதம் இருக்குதுன்னும் அதை முழுசா விசாரிக்கணும்னும் யுனிவர்சிட்டி நிர்வாகத்தோடு சம்பந்தப்பட்டவங்க சொல்றாங்க. காயத்ரி அலுவலகத்தில் நடந்த சம்பவத்தால் ஜெ. கடுங்கோபத்தில் இருக்காராம்.'' நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக