சனி, 13 ஆகஸ்ட், 2016

பன்னீர்செல்வம் சட்டசபையில் கத்திய Beep வார்த்தை ... திருப்பி அடிச்ச ஸ்டாலின்

ஜெ., தொகுதி பற்றி பேச கூடாதா?' சென்னை:முதல்வரின் ஆர்.கே.நகர் தொகுதி பற்றி, தி.மு.க., உறுப்பினர் குறைகளை அடுக்கியதால், அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோபம் அடைந்தார். அதைத் தொடர்ந்து, அமைச்சர்களுக்கும், தி.மு.க.,வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சட்டசபையில், நேற்று நடந்த சுற்றுச்சூழல் மற்றும் செய்தித் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்:
தி.மு.க., - சுதர்சனம்: சென்னைக்கு குடிநீர் தரும் புழல், சோழவரம் ஏரிகளை சுற்றி, புதிய குடியிருப்புகள் அதிகரித்துள்ளன; அங்கு கழிவுகளை கொட்டுவதாலும், பாதாள சாக் கடை திட்டம் இல்லாததாலும், நீர் நிலை பாதிக்கப் படுகிறது விபத்தில் சிக்கியவர்களை, ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு போவதற்குள்,உயிர் பறி போய் விடுகிறது. அதனால், தாம்பரம் போல, மாதவரத்தில், பொது மருத்துவமனை அமைக்க வேண்டும்.


சென்னை, ஆர்.கே.நகரில், பூமிக்கு அடியில் செல்லும் பல்வேறு எண்ணெய் நிறுவனங்களின் குழாய்கள் உடைந்து,நிலத்தடி நீர் பாதித்துள்ளது. இப்படி, ஆர்.கே.நகர் பற்றி குறைகளை அவர் அடுக்கியதால், அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உறுப்பினரை பார்த்து கோபமாக, ஒரு வார்த் தையை கூறினார்;

அதற்கு ஸ்டாலின் எழுந்து, அமைச்சரை பார்த்து, அதே வார்த்தையை கூறினார். இதனால், இரு தரப்பிலும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
ஓ.பன்னீர்செல்வம்: உங்க தொகுதி பிரச்னையை பற்றி மட்டும் பேசி, வம்பு செய்யாமல் இருந்தால், இந்த விவாதமே ஏற்பட்டிருக்காது. ஆர்.கே.நகரை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்.
ஸ்டாலின்: அங்கு, எங்களுக்கு,55 ஆயிரம் பேர் ஓட்டு போட்டிருக்கின்றனர்.
சபாநாயகர் தனபால்: உறுப்பினர்கள், தங்கள் தொகுதி பற்றி மட்டுமே பேசுவது வழக்கம்.
ஸ்டாலின்: அன்று, மா.சுப்பிரமணியன் பேசிய போது, 'சென்னையை பற்றி மட்டுமே பேசுகிறீர் கள்; அதைவிட்டு, தமிழகம் முழுவதற்கும் பேசுங்
Advertisement
கள்' என, முதல்வர் கூறினார். நீங்களோ, 'தொகுதி பற்றி மட்டுமே பேசுங்கள்' என்கிறீர்கள்.

சபாநாயகர்: முதல்வர் பேசும் போது, உங்கள் உறுப்பினர்கள், 30, 40 பேர் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்; எப்படி சபையை நடத்துவது?

ஸ்டாலின்: அமைச்சர் அந்த வார்த்தையை கூறியதற்காக, வெட்கப்படுகிறேன்; வேதனைப் படுகிறேன்.

ஓ.பன்னீர்செல்வம்: நான் கூறியதையும், பதிலுக்கு ஸ்டாலின் கூறியதையும் நீக்க வேண்டும்.அதை சபாநாயகர் நீக்கியதும், அரை மணி நேரம் நிலவிய அமளி, முடிவுக்கு வந்தது.  தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக