வியாழன், 11 ஆகஸ்ட், 2016

தனியார் நிறுவன பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு 6 மாதம் .. மசோதா தாக்கல்

புதுடெல்லி: அரசு நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு 6 மாத காலமாகவும், தனியார் நிறுவன பெண் ஊழியர்களுக்கு 3 மாத காலமாகவும் இதுவரை இருந்தது. இதனை மாற்றி தனியார் நிறுவன பெண் ஊழியர்களுக்கும் 6 மாத விடுப்பு அளிப்பது உட்பட பல்வேறு அம்சங்களுடனான மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் இன்று நிறைவேற்றப்பட்டது. மகப்பேறு விடுப்பு சட்டத்திருத்த மசோதாவின் முக்கிய அம்சங்கள்:
  • இந்த மசோதாவால் தனியார் நிறுவன கர்ப்பிணி ஊழியருக்கான விடுப்பு 3 மாதத்திலிருந்து 6 மாதமாக உயர்கிறது.
  • 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனத்தில் குழந்தைகள் காப்பகம் அமைக்க வேண்டும்.
  • பச்சிளம் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கும் தாய்மார்களுக்கு 3 மாதம் விடுப்பு அளிக்கப்படும்.
  • மகப்பேறு விடுப்பு சட்டத்திருத்த மசோதா நிறைவேறியதன் மூலம் 18 லட்சம் பேர் பயன்பெறவுள்ளனர்.  மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக