திங்கள், 22 ஆகஸ்ட், 2016

42 நாட்களாக காஷ்மீர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது

President urged to intervene in Kashmir crisisடெல்லி: "கடந்த 42 நாட்களாக காஷ்மீர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. காஷ்மீரில் நடப்பது அரசியல் பிரச்சனை என்பதை மத்திய அரசு உணரவில்லை. எனவே நீங்கள் தலையிட்டு சுமூகத் தீர்வை எட்ட வேண்டும்" என்று காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா தலைமையில் 20 எதிர்க்கட்சித் தலைவர்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.
புர்கன் வானி கொலைக்குப் பின்னர் காஷ்மீரே களேபரமானது. காஷ்மீர் மக்களின் போராட்டத்தை மத்திய அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேரடியாக தலையிட்டு சுமூகமான முடிவை கொண்டு வர வேண்டும் என்று ஒமர் அப்துல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இது தொடர்பாக ஜனாதிபதியை சந்தித்து ஒரு மணிநேரம் ஆலோசனை நடத்திய பின்னர், ஒமர் அப்துல்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காஷ்மீர் பிரச்சனையை அங்கீகரிப்பதில் மத்திய அரசு தோல்வி கண்டதால்தான் பிரச்சனை தீவிரமடைந்துள்ளது. இது அரசியல் பிரச்சனை என்பதை மத்திய அரசு உணரவில்லை. காஷ்மீர் பிரச்சனை என்ன என்று அனைவரையும் அழைத்து அர்த்தமுள்ள சுமூகமான பேச்சுவார்த்தையை மத்திய அரசு நடத்த வேண்டும்.
காஷ்மீரில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீ, தற்போது பஞ்சால், செனாப் பள்ளத்தாக்கிற்கும், கார்கிலுக்கும் பரவியுள்ளது. நிலைமை மோசமாக போய்க் கொண்டிருப்பதை மத்திய அரசு இன்னும் கண்டு கொள்ளவில்லை.
காஷ்மீரில் பெட்ரோல் விற்பனைக்கு தடை விதிப்பது, அத்தியாவசிய பொருட்களை முடக்குவது போன்ற நிர்வாக ரீதியான நடவடிக்கைகளின் மூலம் போராட்டங்களை கட்டுப்படுத்த முடியாது. காஷ்மீர் மாநில மக்களோடு மத்திய அரசு உரையாடலைத் தொடங்க வேண்டும் என்றார் ஒமர் அப்துல்லா.  tamiloneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக