சனி, 27 ஆகஸ்ட், 2016

விஷவாயு தாக்கி பலியான 41 தொழிலாளர்கள் குடும்பத்தினரை கண்டுபிடிக்க முடியவில்லை: தமிழக அரசு சொல்கிறது

தீக்கதிர் : விஷவாயு தாக்கி இறந்த 41 துப்புரவுத் தொழிலாளர்களின் குடும்ப ங்களைக் கண்டுபிடிக்க முடியாததால், அவர்களுக்கு இழப்பீடு வழங்க முடியவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.‘தமிழகத்தில் கழிவுநீர் தொட்டி கள், குழாய்களுக்குள் இறங்கி அடைப்புகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டதுப்புரவுத் தொழிலாளர்களில், சுமார்200 பேர் விஷவாயு தாக்கி பலியாகி யுள்ளதாகவும், அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ‘மாற்றத்திற்கான இந்தியா’ என்ற அமைப்பின் இயக்குநர் நாராயணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

கடைசியாக நடந்த விசாரணையின்போது, விஷவாயு தாக்கி பலியான தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த நிலையில், அந்தமனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இந்நிலையில், நாராயணன் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அட்வகேட்ஜெனரல் ஆஜராகி, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளது என்றும் அந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது என்றும் கூறினார்.
இதற்கு மனுதாரர் நாராயணன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.மேலும், கடந்த 16-ஆம் தேதி தமிழகஅரசு தாக்கல் செய்த நிலை அறிக்கையில், விஷவாயு தாக்கி இறந்த தொழிலாளர்களில் 41 பேர்களது முகவரியை கண்டு பிடிக்க முடியவில்லை என்று கூறப்பட்டி ருப்பதை சுட்டிக்காட்டிய நாராயணன், பலியான தொழிலாளிகளின் குடும்பத் தினரை போலீசார் மூலம் தமிழக அரசு கண்டுபிடிக்க வேண்டும்; அவ்வாறு செய்யாவிட்டால், 41 தொழிலாளர்களின் குடும்பங்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்வேன்’ என்றும் கூறினார்.
இதையடுத்து, விஷவாயு தாக்கி பலியான தொழிலாளர்களின் குடும்பங்களைக் கண்டுபிடித்து இழப்பீடு வழங்கும் பணியை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், உள்ளாட்சித் தேர்தல் வருவதைக் காரணம் காட்டி, இழப்பீடு வழங்கும் பணியை மேற்கொள்ள கால அவகாசம் வழங்க முடியாது என்றும் கூறிவிட்டனர்.மேலும், அடுத்தகட்ட விசார ணையை அக்டோபர் 7-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக