செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர் விடுதலை.. கர்நாடக மைசூரு சிறையில் இருந்து...

மைசூரு: சந்தன கடத்தல் வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரை கர்நாடகா அரசு விடுதலை செய்தது.
நாட்டின் 70 வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நன்னடத்தை அடிப்படையில் கர்நாடகாவில் சிறைகளில் தண்டனை அனுபவித்து வந்த 348 கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய கர்நாடகா அரசு உத்தரவிட்டது. மைசூரு மத்திய சிறையில் இருந்து 52 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இதில் வீரப்பன் கூட்டாளிகளான அன்புராஜ், தங்கராஜ், அப்பர் சாமி, சித்தன் ஆகிய நான்கு பேரும் இடம் பெற்றிருந்தனர். மைசூரு சிறையில் 4 பேரும் தண்டனை அனுபவித்து வந்த நிலையில், கர்நாடகா அரசு உத்தரவிட்டதையடுத்து அவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டனர். தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக