புதன், 17 ஆகஸ்ட், 2016

வர வர ராமதாசுக்கு காதல் கசக்குதையா....: 200 முஸ்லீம் பெண்களை காதலித்து திருமணம் செஞ்சிக்கிட்டாங்க... முழுபேட்டி விடியோ !


பாமக நிறுவனர் ராமதாஸ், தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தலித்துகள், பிரபல தலித் தலைவரின் தூண்டுதலின் பேரில் இஸ்லாமிய பெண்களை காதல் நாடகமாடி திருமணம் செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் 200 முஸ்லீம் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாக அந்த ஊர் இமாம் இதைத் தங்களிடம் தெரிவித்தாக கூறியுள்ளார்.
இந்தப் பேட்டியில் ராமதாஸ் கூறியுள்ள சில கருத்துகள்:
  • அஞ்சாவது படிச்சவன் செல்போன் பயன்படுத்தறான். செல்போன் மூலம் சமூக வலைத்தளங்களில் பெண்களை காதல் வலையில் விழ வைக்கிறார்கள்.
  • நரிக்குறவர்கள் இருக்காங்களே, அதான் பாசி மணி ஊசி மணி விக்கிறவங்க(சிரிக்கிறார்) அவங்க வந்து எம் பொண்டாட்டியைத் தூக்கிட்டுப் போயிட்டாங்கன்னு சொல்றாங்க.
  • கள்ளக்குறிச்சியில் ஒரு பெரிய கோடூஸ்வரர் அவர் பொண்ணு சென்னை படிக்க வந்தது. அந்தப் பொண்ணை காதல் நாடகம் ஆடி ஒருத்தன் வலையில சிக்க வெச்சுட்டான். இவங்களைப் பிரிக்கிறதுக்காக பிரபல தலைவர் பேரம் பேசினார், அந்தக் குடும்பத்துக்கிட்டே. ரூ. 100 கோடி கேட்டு, ரூ. 10 கோடிக்கு பேரம் முடிஞ்சது. அவங்களை பிரிச்சி வெச்சாங்க. அதுக்கு ஆதாரம் என்கிட்ட இருக்கு.
  • கடலூர் மாவட்டத்துல பிராமணர், ரெட்டியார், முதலியார், கவுண்டர், வன்னியர் பெண்கள் 1000 பேர் இந்தமாதிரி காதல் வலையில சிக்கி திருமணம் செய்துக்கிட்டாங்க. இவங்களை திருமணம் செஞ்சி வெக்கிறதுக்குன்னு லாயர் ஒருத்தன் இருக்கான்.
ராம்தாஸின் முழு பேட்டியும் இங்கே… ராமதாஸின் பேச்சைக் கேட்பதோடு அவருடைய உடல்மொழியைக் கவனியுங்கள். பொய்யர்களுக்கான உடல்மொழி என்று அறிய முடியும்.  thetimestamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக