வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

மணப்பறை ..வானும் ஆம்னியும் விபத்து 11 பேர் உடன் மரணம்

திருச்சி அருகே வேனும் ஆம்னி பேருந்தும் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வேனும், ஆம்னி பேருந்தும் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் அம்மாபட்டியைச் சேர்ந்தவர்கள் கோவிலுக்குச் சென்றுவிட்டுச் வேனில் ஊர்திரும்பிக் கொண்டிருந்தனர். திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில், மணப்பாறை அருகே வளநாடு கைகாட்டி என்ற இடத்தில், வேனும், எதிரே வந்த ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதின. இதில் வேன் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் 8 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இதில் படுகாயம் அடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளதுhttp   ://ns7.tv/t

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக