வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

பாஜக மூத்த தலைவர் பிரஜ்பால் மீது துப்பாக்கி சூடு 100 தடவை சூடு... BJP leader Brijpal Teotia in critical condition after being shot at in Ghaziabad

உத்திரப்பிரதேச மாநிலம், காசியாபாத்தில் மர்ம நபர்கள் சிலர் பாஜக மூத்த தலைவர் பிரஜ்பால் மீது 100 ரவுண்டுகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில், அவர் தற்போது கவலைக்கிடமாக உள்ளார்.>பிரிஜ்பால் தனது ஆதரவாளர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு காரில் வந்த மர்ம நபர்கள் வழிமறித்ததுடன், தாங்கள் வைத்திருந்த துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர். சுமார் 100 ரவுண்டுகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் பிரஜ்பால் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். பின்னர் அவர் நொய்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் பிரஜ்பாலுடன் வந்த 7 பேரும் காயமடைந்துள்ளனர். அவர்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மர்ம நபர்கள் பயன்படுத்தியது ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் என கூறப்படுகிறது.நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக