வியாழன், 14 ஜூலை, 2016

சுவாதி ரம்ஜான் நோன்பு இருந்தாரா? பிலால் மாலிக்தான் குற்றவாளி என்று YGM ஏன் ?

ராம்குமார் பற்றி பிலால் போலீஸில் சொன்னது என்ன? சுவாதி வழக்கில் பிலால் முக்கிய சாட்சி என்பதால் ராம்குமார் பற்றி அவர் சொன்ன தகவலை வெளியிட முடியாது. இதனால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே பிலாலுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க முடிவு செய்துள்ளோம் என்று தனிப்படை விசாரணை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென் பொறியாளர் சுவாதி கடந்த மாதம் 24ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். அவரை நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் நேற்று அனுமதியளித்தது.அவரிடம் இரண்டாவது நாளாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ( முகநூல் உபயம்: திலீபன் மகேந்திரன் : ஸ்வாதிக்கு ஏற்கனவே திருமணம் ஆயிடுச்சி, ரிஜிஸ்ட்டர் மேரேஜ். இந்த பொன்னு போன மாசம் நோம்பும் இருந்திருக்கு...
ஸ்வாதியின் தந்தை சந்தான கோபலகிருஷ்ணன். RSS- இயக்கத்தில் ஈடுபாடு உடையவர்.
ஸ்வாதியின் சித்தப்பா கோவிந்தராஜன் விஷ்வ ஹிந்து பரிஷத் உறுப்பினர்.
ஸ்வாதி போன மாசம் நோம்பு இருந்திருக்கு...
ஸ்வாதிய ஒரு வாரம் முன்பு சிவப்பா, உயரமா செவுள்ளையே அறைஞ்சிருக்கான்.
கொலை செய்த இடத்தில் அப்பா ரியக்‌ஷன் சரியில்ல, சித்தப்பா போட்டோ புடிச்சி யாருக்கோ அனுப்பிட்டு இருந்தாரு
எங்கையும் பிசிரடிக்கல.. கரைக்டா சிங் ஆகுது..
.

நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்ற ராம்குமாரிடம் போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் நேற்று இரவு தனியாக விசாரித்தார். அப்போது கமிஷனர் கேட்ட சில கேள்விகளுக்கு ராம்குமார் பதில் அளித்துள்ளார். இந்த விசாரணை ஒரு மணி நேரத்துக்கு மேல் நடந்தது. கமிஷனரின் விசாரணை முடிந்தப்பிறகு போலீஸ் உயரதிகாரிகள் ராம்குமாரிடம் விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் ராம்குமாரை கைது செய்வதற்கு போலீஸாருக்கு உறுதுணையாக இருந்தவர்களில் ஒருவர் சுவாதியின் நெருங்கிய நண்பர் முகமது பிலால் சித்திக். சுவாதி கொலை நடந்தவுடன் அவரிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர் சந்தேகித்த நபர் ராம்குமார். இதன்பிறகே ராம்குமார் குறித்த விவரங்களை சேகரித்த போலீஸார், அவரை கைது செய்தனர்.

ராம்குமாரிடம் முகமது பிலால் சித்திக் குறித்து போலீஸார் கேட்டுள்ளனர். அந்த கேள்விக்கு ராம்குமார் முன்னுக்குபின் முரணாக பதில்களை தெரிவித்துள்ளார். இதனால் முகமது பிலால் சித்திக்கை விசாரணைக்கு வரும்படி போலீஸார் அழைத்தனர். அதன்படி அவர், இன்று காலை மோட்டார் சைக்கிளில் நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். பத்திரிகையாளர்கள், பொது மக்கள் யாரும் தன்னை பார்த்து விடக்கூடாது என்று பைக்கை விட்டு இறங்கிய பிறகும் ஹெல்மெட் அணிந்தபடியே உள்ளே சென்றார். அவரிடம் போலீஸ் அதிகாரிகள், ராம்குமாரை குறித்து கேட்டுள்ளனர். அதற்கு அவர் தனக்கு தெரிந்த பதிலை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து முகமது பிலால் சித்திக்கின் போனுக்கு சுவாதி அனுப்பிய எஸ்.எம்.எஸ்.கள் குறித்து அவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது சுவாதி அனுப்பிய எஸ்.எம்.எஸ்.களில் ராம்குமார் குறித்த விவரங்கள் குறித்து போலீஸிடம் பிலால் சொல்லியுள்ளார். சுமார் இரண்டு மணி நேரம் பிலாலிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதுகுறித்து தனிப்படை போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "பிலால், ராம்குமார் குறித்து சில முக்கிய தகவல்களை இன்று தெரிவித்தார். அந்த தகவலின்படி சுவாதியை ராம்குமார் பின்தொடர்ந்தது உறுதியாகி விட்டது. மேலும், இந்த வழக்கில் பிலால் முக்கிய சாட்சி என்பதால் அவர் சொன்ன தகவலை வெளியிட முடியாது. இதனால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே பிலாலுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க முடிவு செய்துள்ளோம். மேலும், பிலாலின் செல்போனில் ராம்குமார் குறித்த தகவல்கள் உள்ளன. அதை சுவாதியே எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பி இருக்கிறார். இந்த ஆதாரம் வழக்குக்கு முக்கியமானதாகும். எனவே பிலாலின் செல்போனில் உள்ள விவரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம்" என்றார்.

எஸ்.மகேஷ்  விகடன்.com

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக