வெள்ளி, 29 ஜூலை, 2016

பாஜகவின் எம்பி கிரிகெட் வீரர் சித்து ஆம் ஆத்மியில் சேர்கிறார் Navjot Sidhu likely to join AAP next month as 'star campaigner'

பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சிங் சித்து பா.ஜனதா சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி மேல்–சபைக்கு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏற்கனவே அவர் 2 முறை பாராளுமன்ற எம்.பி. ஆகவும் இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம் அவர் டெல்லி மேல்–சபை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். அவர் பா.ஜனதாவில் இருந்து விலகி கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் இணையப் போவதாகவும் செய்திகள் உலா வந்தன. ஆனால், இது குறித்து எந்த தகவலையும் சித்து தெரிவிக்காத நிலையில், தற்போது வரும் சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15-ல்) ஆம் ஆத்மி கட்சியில் சித்து இணையவுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.
பா.ஜனதா கட்சியில் இருந்து சுதந்திரம் பெற்றததை குறிக்கும் வகையில் ஆகஸ்ட் 15-ம் தேதியை சித்து தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் சித்து ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் பஞ்சாப் மாநில முதல் மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட மாட்டார் எனவும், பஞ்சாப் சட்ட சபைதேர்தலில் ஆம் ஆத்மிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார் எனவும் தெரியவருகிறது . மாலைமலர்.காம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக