புதன், 13 ஜூலை, 2016

அஞ்சல் அலுவலகங்களில் கங்கை நீர் விற்பனைக்கு... காசு கொடுத்து நோயை வாங்குங்க


சென்னை பொது அஞ்சலகம் மற்றும் தலைமை அஞ்சலகங்களில், நேற்று முதல், பாட்டில்களில் அடைக்கப்பட்ட, புனித(அசுத்த) கங்கை நீர் விற்பனை துவங்கியது. விற்பனை துவங்கிய சில மணிநேரங்களில், அனைத்து பாஜகவினர் வாங்கியதால் அணைத்து பாட்டில்களும் விற்று தீர்ந்தன. மத்திய அரசு அறிமுகம் : புனித கங்கை நீர், பாட்டில்களில் அடைக்கப்பட்டு, அஞ்சலகங்கள் வாயிலாக விற்பனை செய்யும் திட்டத்தை, சில நாட்களுக்கு முன், மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டம், சென்னை பொது அஞ்சலகம் மற்றும் தலைமை அஞ்சலகங்களில், நேற்று முதல் நடைமுறைபடுத்தப்பட்டது.  உலகின் மிகவும் மோசமான மாசடைந்த நீராக அது மாறின விபரம் கூட காவிகளுக்கு தெரியல

இதுகுறித்து, சென்னை வட்ட அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் கூறியதாவது:
ரிஷிகேஷ் மற்றும் கங்கோத்ரி ஆகிய இடங்களில் இருந்து, கங்கை நீர் பெறப்பட்டு, 200 மி.லி., - 500 மி.லி., பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கங்கோத்ரி பகுதியில் இருந்து பெறப்படும் கங்கை நீர், 200 மி.லி., 25 ரூபாய்; 300 மி.லி., 35 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும்... : ரிஷிகேஷ் பகுதியில் இருந்து பெறப்படும் நீர், 200 மி.லி., 15 ரூபாய்; 300 மி.லி., 22 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இத்திட்டம் வரும் வாரத்தில், தமிழகம் முழுவதும் உள்ள, 94 தலைமை அஞ்சலகங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக