ஞாயிறு, 31 ஜூலை, 2016

ராம்குமார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில்...


ராம்குமார் நேற்று காலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ரகசியமாக கொண்டு வரப்பட்டார். அங்கு சிறைக்கைதிகள் வார்டில் அவரது ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. அவருக்கு தொண்டை வலி இருந்ததால், அதற்கும் சிகிச்சை தரப்பட்டது. தையல் போட்ட இடத்தில் வலி இருப்பதாக கூறியதால், அவருக்கு மருந்துகள் தரப்பட்டன. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘சுவாதியை வெட்ட பயன்படுத்திய அரிவாளில் 2 பேரின் ரத்தம் படிந்துள்ளது. அதில் ஒன்று சுவாதியின் ரத்தம் என்று தெரியவந்துள்ளது. இன்னொரு ரத்தம் ராம்குமாருடையது தானா? என்பதை உறுதிபடுத்துவதற்காக அவரது ரத்தமாதிரி சேகரிக்கப்பட்டு உள்ளது’’ என்றனர்.  தினமலர்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக