செவ்வாய், 19 ஜூலை, 2016

ஒப்பினிங் கிங் அஜித்தின் சம்பளம் டாப்?

தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுபவர் அஜித். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த என்னை அறிந்தால், வேதாளம் ஆகிய இரண்டு படங்களுமே மாபெரும் வசூல் சாதனை படைத்தது. அதிலும் வேதாளம் ரூ 125 கோடி வரை வசூல் செய்தது. இந்நிலையில் அஜித் அடுத்து சத்யஜோதி நிறுவனத்திற்காக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். தல-57 படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜுன் மாதத்தில் துவங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது, மேலும், இப்படத்தை சிவா இயக்க இப்படத்திற்கும அனிருத் தான் இசையமைக்கிறார். இப்படத்தில் அஜித் மட்டுமின்றி மேலும் ஒரு நடிகர் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்க அனுஷ்கா தான் லிஸ்டில் முதலில் உள்ளதாக கூறப்படுகிறது. அஜித்தின் புதிய படத்தில் கதாநாயகியாக அக்ஷாரா நடிக்க கூடும் என்ற வதந்தி ரொம்ப சீரியஸாக உலா வருகிறது


இப்படத்திற்காக வரி போக ரூ 40 கோடி அஜித் சம்பளமாக பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது. மேலும் இவர் நடிப்பில் கடைசியாக வந்த வேதாளம் மாபெரும் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் ரூபனின் படத்தொகுப்பும் ஆகும்.

ஆனால், இதே கூட்டணி மீண்டும் இணைய இதில் ரூபன் வெளியேறி விட்டார், அவருக்கு பதிலாக ப்ரவீன் எடிட்டிங் செய்யவிருப்பதாக செய்திகள் வெளியாகின. ரூபன் வெளியேற முக்கிய காரணம், அவர் அடுத்தடுத்து நிறைய படங்களில் ஒப்பந்தமாகியிருப்பதால் தான் என்றும் கூறப்படுகின்றது ns7.tv

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக