திங்கள், 18 ஜூலை, 2016

மலேயா கபாலியின் வரலாற்றை சுட்ட சினிமா கபாலி.....டாக்டர் சுபாஷினியின் கபாலி குறும்படம்

16-1468644076-kabali-history-600சென்னை: மலேசியாவில் 35 நாட்கள் தங்கியிருந்த போது மலேசிய தமிழர்களின் வரலாற்றை படித்ததாகவும், அதன் தாக்கத்தில் உருவானது தான் கபாலி கதை என்றும் பேட்டி ஒன்றில் இயக்குனர் பா.இரஞ்சித் கூறியுள்ளார். இந் நிலையில் ‘மலேசிய தமிழர்கள்’ பற்றிய ஆவணப்படம் ஒன்று தெரிய வந்துள்ளது. தமிழ் மரபு அறக்கட்டளை சார்பாக, மலேசியாவில் பிறந்து வளர்ந்து, ஜெர்மனியில் வசிக்கும் டாக்டர் சுபாஷிணி இந்த ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். சுமார் 7 மாதத்திற்கு முன்னால் யூ டியூபிலும் வெளியிட்டுள்ளனர்.
கடாரத்தை வென்ற சோழ மன்னன் காலம் முதல் மலேசியாவில் 93 ஆண்டுகள் சோழர்கள் ஆண்டு வந்ததாகவும் ஆனால் அந்த காலக் கட்டத்தில் அங்கு தமிழ் மொழி வளரவில்லை என்றும் கூறும் இந்த ஆவணப்படத்தில், பிற்கால தமிழர்கள் பற்றியும் கூறப்பட்டுள்ளது.

15 ஆம் நூற்றாண்டில் வாணிபத் தொடர்புகளுக்காகவும், ஆங்கிலேயர்கள் காலத்தில் அரசியல் கைதிகள், அதிகாரிகள், தொழிலார்கள் ஆகவும் தமிழர்கள் மலேசியாவுக்கு குடிப் பெயர்ந்துள்ளார்கள்
18 ம் நூற்றாண்டு தொடக்கம் முதல், மலேசியாவுக்கு குடி பெயர்ந்த தமிழர்கள் தங்கள் தாய்மொழி தமிழையும், தமிழ் கலாச்சாரத்தையும் பேணிக் காத்து இன்று மலேசியத் தமிழர்கள் என்ற தனித்துவத்துடன் ஒரு இனம் உருவாகும் அளவுக்கு வளர்ந்துள்ளார்கள்.
வாணிபத்திற்காக காரைக்குடி, திருச்சி, புதுக்கோட்டை பகுதியிலிருந்து சென்றிருக்கிறார்களாம்.
காவல் துறையினர், அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் போன்ற பதவிகளுக்கு இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து சென்றார்களாம்.
தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் விவசாய்த் தொழிலாளர்களாக சென்றவர்கள் நாகப்பட்டினம், நாமக்கல் , கோயமுத்தூர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பகுதியைச் சார்ந்தவர்களாம்.
காடுகளில் உள்ள மரங்களை வெட்டி, ரப்பர் பயிரிட்டு, வளர்த்து, பால் எடுத்து, தொழிற்சாலையில் வேலை பார்த்து என்று அனைத்து வகையிலும் தமிழர்கள் உடல்உழைப்பைக் கொட்டியுள்ளார்கள்.
ஆங்கிலேய முதலாளிகளை விட, கங்காணிகளின் கொடூரம்தான் தாங்க முடியாத அளவுக்கு இருந்த போதிலும் சென்ற இடத்தில் தமிழகக் கலாச்சாரம், பண்பாடு, தமிழ் மொழியை கட்டிக்காத்து வந்துள்ளார்கள்.
இப்போது மூன்றாம் நான்காம் தலைமுறைத் தமிழர்கள் மலேசியாவில் நல்ல நிலைக்கு வந்து தனித்துவத்துடன் வாழ்வதாகவும் அந்த ஆவணப் படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியத் தமிழ் என்று தனி அடையாளமும் கிடைத்துள்ளது.
இயக்குனர் பா. இரஞ்சித் , உழைக்கும் வர்க்கத்தினர் உறிஞ்சப்பட்டதை எதிர்த்து உருவான தலைவன் தான் கபாலி என்று கூறியுள்ளார். அப்படி என்றால், இந்த ஆவணப் படத்தின் படி அவர்களின் கதைதான் கபாலி 
இதோ அந்த வீடியோ…
-இர தினகர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக