செவ்வாய், 26 ஜூலை, 2016

கபாலி தோல்விப்படமாம் வைரமுத்து காய்ச்சல் ! பாட்டெழுத சான்ஸ் கிடைக்கல இருக்காதா?


ரஜினிகாந்த் நடித்து கடந்த 22ம் தேதி காபலி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. 2016ம் ஆண்டில் இதுவரை எந்த படமும் நிகழ்த்திராத சாதனயை இப்படம் நிகழ்த்தியுள்ளது. கடந்த மாதம் இந்தி நடிகர் சல்மான்கானின் நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் இந்தியாவில் முதல் நாள் செய்த வசூலே இதுவரை சாதனையாக இருந்து வந்தது. இந்தியாவில், சுல்தான் திரைப்படம் முதல் நாளில் மட்டும் ரூ. 36.54 கோடி வசூல் செய்திருந்தது. கபாலி முதல் நாளில் மட்டும் ரூ. 48 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு வசூல் சாதனை செய்த திரைப்படங்களான பாகுபலி, அஜித்தின் வேதாளம், இந்த ஆண்டு வெளியான விஜயின் தெறி ஆகிய படங்களின் அனைத்து வித சாதனைகளையும் ரஜினியின் கபாலி உடைத்து புதிய சாதனை புரிந்திருக்கிறது என்கிறது நியூஸ் 7 செய்தி.
ஆனால், பாடலாசிரியர் வைரமுத்து, கபாலி ஒரு தோல்விப்படம். விரும்பியோ, விரும்பாமலோ அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்கிறார். வீடியோ இணைப்பில் பாருங்கள்.  thetimestamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக