வியாழன், 28 ஜூலை, 2016

முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் : பிரதமர் மோடி என்னை கொலை செய்தாலும் ஆச்சர்யம் இல்லை

புதுடில்லி:''பிரதமர் மோடி, என்னை கொலை செய்தாலும் ஆச்சர்யமில்லை,'' என, டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான கெஜ்ரி வால் கூறியுள்ளார். டில்லியில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமை யிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. கெஜ்ரி வால், முதல்வராக பதவியேற்றதிலிருந்து, மத்திய அரசுடன் மோதல் போக்கை பின்பற்றி ;வருகிறார். பிரதமர் மோடியையும், கடுமை யாக விமர்சிக்கிறார்.
இதற்கிடையே, பல்வேறு குற்றச்சாட்டுகளால், டில்லி அமைச்சர்களும், ஆம் ஆத்மி கட்சி தலைவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், 'ஆன்லைனில்' வீடியோ ஒன்றை, கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார்அதில் அவர் கூறியுள்ளதாவது:ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள், தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த கைது நடவடிக்கைகளுக்கு, மூளையாக செயல்படுவது, பிரதமர் மோடி தான். இதை, நான் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பது இல்லை.   அர்விந்த் கேஜிரிவால் கூறுவது உண்மைதான்... பாஜகவின் முதல் எதிரியாக அர்விந்த் கேஜ்ரிவால் விளங்குகுகிறார்  பார்பனர்கள் எல்லாம் கேஜிரிவாலை மிக மோசமாக விமர்சிப்பது இங்கே கவனிக்க தக்கது .
< ஆம் ஆத்மி கட்சியை எப்படியாவது அழித்துவிட, மோடி துடிக்கிறார். ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க் களுக்கும், தொண்டர்களுக்கும், வரும் நாட்கள் மிகவும் மோசமாக இருக்கும்.

இந்த சவாலை எதிர்கொள்ள தைரியமில்லாதவர்கள், எங்களை விட்டு சென்றுவிடலாம். ஏனெனில், நம்மை அழிக்க, பிரதமர் மோடி, எதையும் செய்ய தயங்கமாட்டார். என்னை கொலை செய்தாலும் செய்வார். அதனால், உங்கள் குடும்பத்தினரிடம் பேசி, எந்த தியாக மும் செய்வதற்கு தயாராகுங்கள்.

பஞ்சாப், கோவா, குஜராத் ஆகிய மாநிலங்களில், ஆம் ஆத்மி வளர்ச்சியடைந்து வருவது, மோடிக்கும், பா.ஜ.,வுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால், நம்மை அழிக்க எதையும் செய்ய துணிவார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்  தினமலர்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக