சனி, 16 ஜூலை, 2016

“பியூஷை சிறையில் முப்பது காவலர்கள் தாக்கியிருக்கின்றன

சேலத்தில், பொதுமக்களிடம் முறையாக நோட்டீஸ் வழங்கப்படாமல், முள்வாடி பகுதியில் பாலம் கட்டும் பணிகளை மேற்கொண்டதாகக் கூறி கடந்த வாரம் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த விவகாரத்தில், சூழலியல் செயற்பாட்டாளர் மற்றும் சேலம் மக்கள் குழு ஒருங்கிணைப்பாளர் பியூஷ் மனுஷ் மற்றும் கார்த்திக், முத்து ஆகியோரை கடந்த ஜூலை 8ஆம் தேதி, சேலம் டவுன் நிலைய போலீஸார் கைது செய்தனர்.
இதில், கார்த்திக் மற்றும் முத்துவுக்கு நேற்று முன்தினம் பிணை வழங்கப்பட்டு விட்டது. பியூஷிக்கு பிணை வழங்க காவலர்கள் கடுமையான ஆட்சேபம் தெரிவித்தனர். அதனால் அவருக்கு பிணை மறுக்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில், பியூஷை அவரது மனைவி மோனிகாவும், செயற்பாட்டாளர் ஈஸ்வரனும், தர்மபுரி மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர் பாலாவும் சந்தித்தனர். அப்போது அவர்களிடம் தம்மை சிறைக் காவலர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளதாக பியூஷ் தெரிவித்துள்ளார்.
வினுப்பிரியா தற்கொலை சமயத்தில், போலீஸாரின் பொறுப்பின்மையால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் எனக்கூறி பியூஷ் போராடினார். இதை மனதில் வைத்துக்கொண்டே காவல்துறை, சிறைக் காவலர்கள்மூலம் கடுமையான தாக்குதலை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதுகுறித்து வழக்கறிஞர் மாயன் செய்தியாளர்களிடம், “பியூஷை சிறையில் முப்பது காவலர்கள் தாக்கியிருக்கின்றனர். காவலர்கள் பியுஷைக் கொல்ல திட்டமிட்டு இருக்கிறார்களோ என அஞ்சுகிறோம்” என்றார்.
இதுகுறித்து பியூஷின் மனைவி மோனிகா செய்தியாளர்களிடம், “காவல்துறை அவரை சிறையிலே ஏதாவது செய்துவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது. உடனடியாக, அரசு இதில் தலையிட வேண்டும்” என்று கதறி அழுதிருக்கிறார். minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக