சனி, 30 ஜூலை, 2016

தியேட்டரில் 'கபாலி' வசனங்களுக்கு சென்சார்.. ஆப்பரேட்டர்கள் கைவரிசை.. ஆடியோ மியுட் செய்யப்படுகிறது.. ஜாதி ஜாதி

போன ஞாயிற்றுக்கிழமை பழனியிலுள்ள 'வள்ளுவர்' தியேட்டரில் தன் மனைவியுடன் மாலையில் 'கபாலி' படம் பார்க்க சென்றுள்ளார் ஒரு தோழர். படத்தில் ராதிகா ஆப்தே 'யார் எந்த உடை போடனும்னு யார் முடிவு செய்றது?' என்று பேசும் இடத்தில் மட்டும் ஆடியோ 'மியூட்' செய்யப்பட்டுள்ளது. முதலில் ஏதாவது தொழில்நுட்பக் கோளாராய் இருக்கும் என்று நினைத்துள்ளார் தோழர். அந்த திரைப்படத்தில் மிகவும் முக்கியமான 'காந்தி சட்டையை கழட்டினதுக்கும், அம்பேத்கர் கோர்ட் போட்டதுக்கும் பின்னால் நிறைய காரணம் இருக்கு' என்று ரஜினி பேசும் காட்சியிலும் ஆடியோ மியூட் செய்யப்பட்டு உடனே அடுத்த காட்சியில் ஆடியோ சரியாக வந்த போது தான் இது திட்டமிட்டு செய்யப்படுவதாக உணர்ந்துள்ளார். இது குறித்து தியேட்டர் நிர்வாகத்திடம் முறையிட முயன்றபோது அவர் மனைவி தடுத்துள்ளார். ஆனாலும் அந்த தியேட்டர் காண்டீனில் இருந்தவரிடம் 'இது சரியில்லை. திட்டமிட்டு ஆடியோவை குறைப்பது நல்லதல்ல. அடுத்த எங்காவது நடந்தால் நான் புகார் செய்வேன்' என்று கூறியுள்ளார்.

இந்த தகவலை ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த தமிழ்ப்புலிகள் தோழர் கார்த்திக் தான் என் கவனத்திற்கு கொண்டு வந்தார். அந்த குறிப்பிட்ட தோழரிடம் போனில் பேசினேன். அவரே நடந்ததை விளக்கினார். (இந்த தகவலை தனிப்பட்ட முறையில் என்னால் உறுதி செய்துக்கொள்ள முடியவில்லை)
நாங்க பேசத் தொடங்கி நாளாச்சு. இப்ப கத்த தொடங்கியிருக்கிறோம். எங்க வாய மூட முடியாதுன்னு தெரிஞ்சு போச்சு, அதான் காத மூடிக்கிறீங்களா? இன்னும் எவ்வளவு காலத்துக்கு? நீங்க கேட்கும்வர கத்துவோம்.  முகநூல் பதிவு :  Joshua Isaac Azad 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக