வியாழன், 28 ஜூலை, 2016

உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள்...

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 12 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 6,471 ஊராட்சி ஒன்றியங்கள், 12,524 ஊராட்சிகள் உள்ளன. ஆகஸ்டு மாத இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான வெற்றிகளைப் பெற வேண்டும் என்று பிரதான கட்சிகள் திட்டமிட்டுள்ளன. பாமக தலைமை, வரும் உள்ளாட்சித் தேர்தலில் வடமாவட்டங்களில், மாவட்டத்தில் ஒரு நகராட்சி சேர்மேன், ஊராட்சி ஒன்றிய சேர்மேன் பதவியைப் பிடிக்கவேண்டும் என்று ஆலோசனையில் இருந்துவருகிறது. அரியலூர், கடலூர், விழுப்புரம், வேலுர், சேலம், தர்மபுரி மாவட்டங்களில் உள்ள நகராட்சி, ஊராட்சி ஒன்றியம் பகுதிகளில் ரிப்போர்ட் கேட்டுள்ளார்கள்.  

தனித்து உள்ளாட்சித் தேர்தல் களத்தில் இறங்குவதால், நகராட்சிகளில் அனைத்து சாதிகளும் நிறைந்து இருப்பதால் வன்னியர்கள் வாக்குகள் குறைவாக இருக்கிறது. ஒன்றியப் பகுதிகளில் வன்னியர் வாக்குகள் அதிகமாக உள்ளன. அதனால் ஒன்றியங்களில் கவனம் செலுத்த பாமக தலைமை, நிர்வாகிகளுக்கு வலியுறுத்தியுள்ளது என்கின்றனர் பாமக-வினர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைப் பொறுத்தவரை, ‘உள்ளாட்சித் தேர்தலில் மதவாதக் கட்சியுடன் கூட்டணி இல்லை’ என்று பாஜக-வை நேரடியாகக் குறிப்பிடுகிறார் திருமாவளவன். அதேநேரத்தில் மார்க்சிஸ்ட் கட்சி பிரகாஷ் காரத் எழுதிய கட்டுரையில், காங்கிரசுடன் கூட்டணி இல்லை, இனி அதற்கு வாய்பும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், அம்பேத்கர் திடல் அலுவலகத்தில் திருமாவளவன், சிந்தனைசெல்வன், ரவிக்குமார் ஆகியோர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது, ‘கடந்த தேர்தலில் திமுக-வுடன் கூட்டணி வைத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம். அதிமுக-வை ஆட்சிக்கு வராமல் தடுத்திருக்கலாம்’ என்று திருமாவளவன் வருத்தத்துடன் பேச, அருகிலிருந்த ரவிக்குமார், ‘கலைஞர் திருவாரூர் போகும்போதும்கூட நம்மிடம் பேச அழைத்தார். நாம்தான் வேண்டாம் என்று சொல்லிட்டோம்’ என்றார். ஆக, திமுக குறித்து எங்கள் டிஸ்கசனில் தீவிரமாக அலசப்பட்டுள்ளது. எனவே, திமுக-வுடனான வி.சி.க. சந்திப்பு நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை’ என்கின்றனர் வி.சி.க.வினர். இதற்கிடையே, மாவட்டரீதியாக நிர்வாகிகளை அழைத்த த.வா.க. நிறுவனர் வேல்முருகன், ‘உள்ளாட்சித் தேர்தலில் கட்சி சார்பாக யாரும் போட்டியிட வேண்டாம். போட்டியிட்டுவிட்டு அதன்பின் எனக்கு பணக்கஷ்டம் என்று புலம்ப வேண்டாம். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக ஆதரவு கேட்டால் எந்த நிபந்தனையும் இல்லாமல் ஆதரவு கொடுக்கலாம். அதுவே இப்போதைக்குச் சரி’ என்று தெரிவித்துள்ளார்.  minnambalam.கம

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக