இந்திய
உயர்கல்வி நிறுவனங்களில் சென்னை ஐ.ஐ.டி முக்கியமானது. இங்கு கல்வி
கற்பதென்பது பலரின் கனவு. ஆனால், கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு சர்ச்சைகளில்
சிக்கி வரும் ஐ.ஐ.டி வளாகத்தினுள் உள்ள குடியிருப்பில் இரு பெண்கள்
தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.
சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி-யில் புதுச்சேரியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. தத்துவவியல் துறையில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்தார். இந்நிலையில் இவர், ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள சபர்மதி விடுதியில் நேற்று புதன்கிழமை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதேசமயத்தில் ஐ.ஐ.டி-யில் பேராசிரியராக பணிபுரிந்து வரும் கணேசன் என்பவரின் மனைவியான விஜயலட்சுமியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஒரே நேரத்தில் மாணவியும், பேராசிரியரின் மனைவியும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ஐ.ஐ.டி. வளாகத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டூர்புரம் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இரண்டு பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஐ.ஐ.டி நிர்வாகம் இந்த தற்கொலைகள் தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ளது. ஆராய்ச்சி மாணவியின் தற்கொலை தொடர்பாக உரியவர்களுக்குத் தகவல் சொல்லி உள்ளோம் என்று மட்டும் கூறியுள்ளது. இந்த இரு தற்கொலைகளும் குறிப்பாக, ஆராய்ச்சி மாணவியின் தற்கொலை மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது. மின்னம்பலம் .காம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக